Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியை, இந்த தீவிரத்தை இந்திய அணியிடம் எதிர்பார்க்காத ஆஸ்திரேலிய அணி இதையடுத்து நிலை குலைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியை குறைத்து எப்போதும் மதிப்பிட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

Never ever ever underestimate Indians -Justin Langer says

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற வெற்றிக் கணக்கில் இந்தியா கைகொண்டுள்ளது. இதையடுத்து கடந்த 2018-19ல் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது. கேப்டன் விராட் கோலி இல்லாத இந்திய அணியை எளிதில் வீழ்த்தலாம் என்ற ஆஸ்திரேலியாவின் கனவு இதன்மூலம் தகர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியர்களை எப்போதும் எந்த நிலையிலும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் இந்த தொடரிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய ஹெட் கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். 1.5 பில்லியன் மக்களில் இருந்து 11 பேர் கொண்ட வீரர்களுடன் விளையாடும் போட்டி மிகவும் கடினமானதாகதான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, January 19, 2021, 19:11 [IST]
Other articles published on Jan 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+