Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு பொம்மலாட்டத்தை பார்த்தது இல்லை.. கிரிக்கெட் வீரர்களை விளாசிய மனோஜ் திவாரி.. பகீர் டிவிட்

சென்னை: இப்படி ஒரு பொம்மலாட்டத்தை பார்க்கிறேன் என்று டிவிட் செய்து இந்திய கிரிக்கெட் வீரர்களை மனோஜ் திவாரி விமர்சனம் செய்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் டிவிட் செய்தது பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் செய்த டிவிட் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பி உள்ளது .

கிரிக்கெட் வீரர்கள் கோலி, சச்சின், ரோஹித் போன்றவர்கள் விவசாயிகள் போராட்டத்தில் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த பிரபலங்களின் டிவிட்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாகவும், இந்தியாவிற்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திவாரி

திவாரி

அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள், இந்திய விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும், என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களின் இந்த கருத்தை கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

நான் குழந்தையாக இருந்த போது பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை பார்த்தது கிடையாது. முதல்முறையாக நான் 35 வருடத்தில் இப்படி ஒரு பொம்மலாட்டத்தை பார்க்கிறேன் என்று மனோஜ் திவாரி டிவிட் செய்துள்ளார். இவரின் டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

டிவிட்

டிவிட்

இந்திய கிரிக்கெட் வீரர்களை விமர்சிக்கும் வகையில் மனோஜ் திவாரி இந்த டிவிட்டை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்திய வீரர்களை பொம்மை போல ஆட்டுவிக்கிறார்கள் என்று திவாரி டிவிட் செய்து இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

சர்ச்சை

சர்ச்சை

கிரிக்கெட் வீரர்கள் பலரும் விவசாய போராட்டத்தில் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். ஆனால் மனோஜ் திவாரி, சந்தீப் சர்மா, இர்பான் பதான் போன்ற சிலர் மட்டுமே தங்கள் மனதில் பட்டதை குறிப்பிட்டனர். இதில் மனோஜ் திவாரியின் இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

Story first published: Thursday, February 4, 2021, 18:13 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+