Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகில் மேலும் ஒரு கிரிக்கெட் அணி உதயம்! வீரர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்!!

வாடிகன் சிட்டி; கிறிஸ்தவ பாதிரியார்களை கொண்டு, உலகில் புதிதாக ஒரு கிரிக்கெட் கிளப், வாடிகன் சிட்டியில் உதயமாகியுள்ளது. இதில் இந்திய வீரர்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளதுதான் ஆச்சரியம். ஐசிசி அங்கீகாரத்தை பெறுவதை நோக்கி இந்த கிரிக்கெட் அணி வருங்காலத்தில் முன்னேறும் என்று நம்பலாம்.

கிறிஸ்தவர்களின் புனித தலம்

கிறிஸ்தவர்களின் புனித தலம்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை திருச்சபை அமைந்துள்ள வாடிகன் சிட்டியை தலைமையிடமாக கொண்டு புதிதாக ஒரு கிரிக்கெட் டீம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு செயின்ட் பீட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அதிகம்

இந்தியர்கள் அதிகம்

இந்த கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 8 பேர் இந்தியர்கள், பிறர், இலங்கை, பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். பிரிட்டீஷ் நாட்டுக்காரர் பாதர் டோனி இந்த அணியின் கேப்டன். இவர்கள் அனைவருமே வாடிகன் சிட்டி தேவாலய பாதிரியார்களாகும்.

பாதிரியாரும், விளையாட்டு வீரர்களும்

பாதிரியாரும், விளையாட்டு வீரர்களும்

அணியின் மேலாளர் பாதர் எம்மோன் ஓ ஹிக்கின்ஸ் கூறுகையில், வாடிகன் சிட்டி கிரிக்கெட் அணியினர், முதலில் பாதிரியார்கள், இரண்டாவதாகதான் கிரிக்கெட் வீரர்கள் என்றார்.

இந்தியர்களுக்கு ஏன் முக்கியத்துவம்?

இந்தியர்களுக்கு ஏன் முக்கியத்துவம்?

மேலும் அவர் கூறுகையில், இந்தியர்கள்தான் கிரிக்கெட்டில் சிறந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு அணியில் அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மத ஒற்றுமைகாக்க

மத ஒற்றுமைகாக்க

மறைமாவட்ட பேராயர் டேவிட் மோக்சன் கூறுகையில், அனைத்து மதத்தை சேர்ந்த நாடுகளிலும் போய் விளையாடுவதற்கு வாடிகன் சிட்டி அணி தயாராகிவருகிறது. ஸ்பான்சர்கள் கிடைத்தால் இந்தியாவிற்கும் வந்து விளையாடுவோம் என்றார்.

ஆட்டத்துக்கு ரெடி

ஆட்டத்துக்கு ரெடி

போப் அணி, தனது முதலாவது போட்டியில் இத்தாலி கிரிக்கெட் கிளப்புடனும், அதன்பிறகு பிரிட்டீஷ் ராயல் ஸ்டாப் கிளப்புடனும் அடுத்தடுத்து விளையாட உள்ளதாம். ஐசிசி அங்கீகாரம் கிடைத்தால் சர்வதே விளையாட்டிலும் புகுந்துவிட திட்டமிட்டுள்ளது பாதிரியார்களை கொண்ட வாடிகன் அணி.

Story first published: Tuesday, June 24, 2014, 16:46 [IST]
Other articles published on Jun 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+