For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒண்ணுக்கே வழியில்ல.. 4 பேரா.. என்ன நடக்குமோ? இந்திய அணியின் சரிவை தொடங்கி வைக்கும் அவர்..?

மும்பை: ஒரு 4ம் நம்பர் பேட்ஸ்மெனை கண்டுபிடிக்காமல் 4 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில் 4 பேரை அந்த இடத்தில் இறக்க போவதாக புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் கூறியிருக்கிறார்.

4 ஆண்டுகள் கடந்து ஒரு பிரச்னையை இன்னும் தீர்க்க முடியாமல் திண்டாடி வரும் ஒரே அணி இந்தியா தான். 4ம் நம்பர் பேட்ஸ்மென் யாரு என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் சுற்றி சுற்றி வருகிறது பிசிசிஐ.

4ம் வரிசையில், மாற்றி மாற்றிப் பார்த்தும் மண்டை காய்ந்து இருக்கிறது பிசிசிஐ. ஒன்று அல்லது 2 போட்டிகளில் உச்சத்துக்கு போகிறவர்கள், அடுத்த போட்டிகளில் அதலபாதாளத்தில் விழுந்துவிடுகின்றனர். ஆடு, புலி ஆட்டம் போல உலக கோப்பையில் கிடைத்த பாடத்தையும் இன்னும் படிக்காமல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது பிசிசிஐ.

உனக்கு மட்டும் இவ்ளோ பெரிசா தெரியுது.. அதான் அடிக்கிறே..!! ரன் மெஷினை அதகளம் பண்ணிய ஐசிசிஉனக்கு மட்டும் இவ்ளோ பெரிசா தெரியுது.. அதான் அடிக்கிறே..!! ரன் மெஷினை அதகளம் பண்ணிய ஐசிசி

பயிற்சியாளர்கள் நியமனம்

பயிற்சியாளர்கள் நியமனம்

தற்போது அணியில் அனைத்து துறைகளுக்கும் பயிற்சியாளர்களை வேறு நியமித்து இருக்கிறது. வழக்கம்போல ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர். மற்ற பயிற்சியாளர்களும் அப்படியே. தோனி பேட்டிங் வரிசையில் ரகசியம் சொன்ன சஞ்சய் பங்கர் மட்டும் இல்லை.

4ம் நம்பர் பிரச்னை

4ம் நம்பர் பிரச்னை

அவருக்கு பதிலாக புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் செய்யப்பட்டார். தென் ஆப்ரிக்க தொடர் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. அந்த நிலையில், தமது பேட்டிங் பயிற்சியை 4ம் நம்பர் வீரர் என்ற பிரச்சனையில் இருந்து ஆரம்பித்து வைத்திருக்கிறார் அவர்.

உண்மைதான்

உண்மைதான்

ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே 4ம் இடத்துக்கு சரியாக இருப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். விக்ரம் ரதோர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் மிடில் ஆர்டர், சரியான நிலையில் இல்லை என்பது உண்மையே. அதை சரிசெய்து விட முடியும்.

நன்றாக ஆடுகின்றனர்

நன்றாக ஆடுகின்றனர்

ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த சில போட்டிகளில் நன்றாக விளையாடினார். மணீஷ் பாண்டேவும் உள்ளார். இந்திய ஏ அணிக்காக உள்ளூர் போட்டிகளில் அவர்கள் நன்றாக ஆடியுள்ளனர்.

தயார்படுத்த வேண்டும்

தயார்படுத்த வேண்டும்

நான்காவது வரிசைக்கு அவர்கள் தான் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை. அவர்களிடம் போதிய திறமை இருக்கிறது. அவர்களை சரியாகத் தயார்படுத்த வேண்டும் என்றார்.

சதம் அடித்தார்

சதம் அடித்தார்

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த ஒரு நாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் அய்யர். மணீஷ் பாண்டே, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 7, 2019, 13:48 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
New batting coach vikram rathour plans to bring iyer and pandey in 4th position.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X