Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்காலத்துல இவர்தான் இந்திய அணி கேப்டன்.. இப்பவே டிரெய்னிங் கொடுப்போம்!

டெல்லி: நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் அண்டர் 19 இந்திய அணியை வழிநடத்தப்போகும் கேப்டன் பெயரும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவரை பல எதிர்கால திட்டங்களை மனதில் கொண்டு இந்திய தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது. முக்கியமாக எதிர்காலத்தில் கண்டிப்பாக இவர் இந்திய அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.

இவரது சாதனைகளையும், திறமைகளையும் இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் பட்டியலிட ஆரம்பித்துவிட்டனர்.

ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எப்போதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும். இதுவரை 2000, 2008, 2012 அண்டர் 19 உலகக் கோப்பைக்கு போட்டிகளை இந்திய அணி வென்று இருக்கிறது. அதேபோல் சென்ற 2016 வருடம் நடந்த போட்டியில் இறுதி சுற்று வரை சென்று மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு நிகராக அண்டர் 19 போட்டிகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

அடுத்த வருடம்

அடுத்த வருடம்

இந்த நிலையில் 2018ல் நடக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த போட்டிகள் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி நியூசிலாந்தில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடர் பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள்தான் இன்னும் 5 வருடங்களில் ஐசிசி போட்டிகளில் கலக்குவார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

தற்போது இந்த உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மும்பையை சேர்ந்த 'பிரித்வி ஷாவ்' இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வலது கை பேட்ஸ் மேனான இவர் வலது கைது பந்து வீச்சாளரும் கூட. இவர் சிறந்த ஆல் ரவுண்டராக் வலம் வருவார் என்று கூறப்படுகிறது. இந்திய கேப்டன்களில் வரிசையில் நீண்ட காலத்திற்கு பின் ஒரு ஆல் ரவுண்டர் கேப்டன் இடம்பிடித்து இருக்கிறார்.

இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம்

இந்த நிலையில் தற்போது இவரை இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக நியமிக்க நிறைய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இந்திய தேர்வு வாரியம் இவர் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருக்கிறது. 2008 அண்டர் 19 கோப்பையை வாங்கி கொடுத்த கோஹ்லிதான் தற்போது இந்திய அணிக்கு கேப்டன். அதேபோல் இவரும் இன்னும் பத்து வருடங்களுக்குள் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வலம் வர வாய்ப்புள்ளது. நியூசிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இவரது தலைமைப்பண்பு குறித்து தெரியவரும்.

Story first published: Friday, January 12, 2018, 17:50 [IST]
Other articles published on Jan 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+