Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் இடையே பிரபலமாகி வரும் தாடி மழிக்கும் சவால் போட்டி

Recommended Video

வித்தியாசமான சவாலை தேர்வு செய்யும் ஐபிஎல் வீரர்கள்

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள், அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், வீரர்கள் இடையே புதிய போட்டிபிரபலமாகி உள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் நடக்க உள்ள 60 ஆட்டங்களில் இதுவரை 19 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

New challenge for IPL cricketers

இதில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அணியும் அதிரடி ஆட்டங்கள் மூலம் புதிய புதிய சாதனைகளை படைத்து வருகின்றன. இந்த சீசனில் கோப்பையை வெல்லப் போவது யார் என்பது கணிக்க முடியாத அளவுக்கு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் கடுமையாக உள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் இடையே புதிய போட்டி நடந்து வருகின்றது. பிரேக் த பியர்ட் என்ற அந்த போட்டியில், தங்களுடைய தாடியை வித்தியாசமான முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தாடி மழிக்கும் சவால்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஷிகார் தவான் இந்த சவாலை துவக்கி வைத்தார். அந்த சவாலில் கேன் வில்லியம்சன், ரவீந்திர ஜடேஜா, மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்டயா, குருணால் பாண்டயா என பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் தங்களுடைய தாடியை மாற்றி அமைத்து, அதற்கான வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே ஐபிஎல்லில் இந்த சவால் பிரபலம். தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

இந்த சீசன் முடிவதற்குள் இன்னும் எத்தனை வீரர்கள், தங்களுடைய தாடியை இழக்க உள்ளனரோ.

Story first published: Saturday, April 21, 2018, 22:49 [IST]
Other articles published on Apr 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+