Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னுடைய அடுத்த ஆக்சனை பாருங்க.. தொடக்கமே அதிரடி.. இந்திய அணியில் நடக்க போகும் பெரிய மாற்றம்!

மும்பை: இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக தேர்வாகி இருக்கும் சேட்டன் சர்மா தொடக்கத்திலேயே அதிரடி பேட்டியை அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேட்டன் சர்மாவை நியமிக்க கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தேபாஷிஷ் மோகன்டி, அபே குருவில்லா ஆகியோரும் இந்திய அணியின் தெரிவுக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அடுத்த ஒருவருடம் எப்படி இந்திய அணியை தேர்வு செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும்.

 சேட்டன் சர்மா

சேட்டன் சர்மா

இந்த நிலையில் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக தேர்வாகி இருக்கும் சேட்டன் சர்மா தொடக்கத்திலேயே அதிரடி பேட்டியை அளித்துள்ளார். எனக்கு வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ அமைப்பிற்கு நன்றி. இதன் மூலம் இந்திய அணிக்கு நான் மேலும் சேவை செய்ய முடியும்.

வீரர்கள் தேர்வு

வீரர்கள் தேர்வு

இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய திறமைகளை கண்டுபிடிக்க போகிறேன். எனது பணியை தொடங்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

 அதிகம் பேச மாட்டேன்

அதிகம் பேச மாட்டேன்

நான் பொதுவாக அதிகம் பேச மாட்டேன். நான் சில விஷயங்களை செயலில் காட்ட விரும்புகிறேன். என்னுடைய பேட்டியை விட என்னுடைய ஆக்சன் மிகவும் வலிமையானதாக இருக்கும், என்று சேட்டன் சர்மா கூறியுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக ஆட உள்ள இந்திய அணியில் இடம்பெற போகும் வீரர்களை இவர்தான் தேர்வு செய்ய போகிறார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுகுழு செய்த இந்திய அணி தேர்வு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில்தான் சேட்டன் சர்மாவின் தேர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடக்கத்திலேயே இவர் அதிரடியாக பேச தொடங்கி இருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, December 25, 2020, 13:17 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+