Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய கோச், புதுமுகம் லாபுசாக்னேவுடன் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகும் ஆஸ்திரேலியா

சிட்னி : இந்தியாவில் வரும் ஜனவரி 14ம் தேதி துவங்கி 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐசிசி தரவரிசையில் 5வது இடத்திற்கு தடாலென முன்னேறியுள்ள மார்னஸ் லாபுசாக்னே இந்த தொடரின்மூலம் தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியை துவங்கவுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இந்த அணிக்கு பயிற்சியாளராக ஆன்ட்ரூ மெக்டொனால்ட் தலைமை வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜோஸ் ஆசல்வுட்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

3 ஒருநாள் போட்டிகளில் மோதல்

3 ஒருநாள் போட்டிகளில் மோதல்

இந்தியாவில் அடுத்த மாதம் 14ம் தேதி துவங்கி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியா இந்தியாவுடன் மோதவுள்ளது. இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தனது முதல் ஒருநாள் போட்டியை மார்னஸ் லாபுசாக்னே விளையாட உள்ளார்.

"சரியான கைகளில் அணியினர்"

துணை பயிற்சியாளராக இருந்த ஆன்ட்ரூ மெக்டொனால்ட் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அணி சரியான நபரின் கைகளுக்கு செல்லவுள்ளதாக கூறியுள்ளார்.

7 வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை

7 வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியுற்ற நிலையில், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நாதன் கால்டர்-நைல், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் லியோன், காயம் காரணமாக ஜாசன் பெஹ்ரன்டார்ப் ஆகியோர் இந்தியாவிற்கு எதிரான அணியில் இடம்பெறவில்லை.

தேர்வாளர் ட்ரெவர் ஹான்ஸ் நம்பிக்கை

தேர்வாளர் ட்ரெவர் ஹான்ஸ் நம்பிக்கை

டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியினரின் திறன் உள்ளூரில் மிக சிறப்பாக உள்ளதாகவும், அந்த திறனை இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர்கள் எதிரொலிக்க செய்வார்கள் என்றும் தேசிய தேர்வாளர் ட்ரெவர் ஹான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஜ்காட், பெங்களூருவில் போட்டிகள்

ராஜ்காட், பெங்களூருவில் போட்டிகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இந்த தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 14ம் தேதி மும்பையில் துவங்கவுள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டிகள் ராஜ்காட்டில் 17ம் தேதியும் பெங்களூருவில் 19ம் தேதியும் நடைபெறவுள்ளன.

Story first published: Tuesday, December 17, 2019, 15:18 [IST]
Other articles published on Dec 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+