Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்கதான் இனிமேல் கோச்.. லிஸ்ட் தயாரிக்கும் பிசிசிஐ.. விரைவில் மாற்றப்படும் ரவி சாஸ்திரி.. பின்னணி

டெல்லி: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த வருடம் முடிய உள்ள நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

அதே சமயம் டி 20 தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் 1-1என்ற கணக்கில் இந்தியா - ஆஸ்திரேலியா சமநிலையில் உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த வருடம் முடிய உள்ள நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இவரின் பதவிக்காலம் முடியும் என்கிறார்கள். இதனால் இன்னும் சில மாதங்களில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

மாற்றம்

மாற்றம்

இவரின் பதவிக்காலம் ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் இவரின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படாது. ஆஸ்திரேலிய தொடரில் நன்றாக ஆடி இருந்தாலும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று கூறுகிறார்கள்.

புதிய நபர்

புதிய நபர்

அதன்படி வரும் மே மாதத்திற்கு முன்பாக இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி இந்திய அணியின் பயிற்சியாளராக டிரேவார் பெய்லீஸ், சைமன் கடிச், டிராவிட் ஆகிய மூன்று பேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். டிரேவார் பெய்லீஸ் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர், இவர்தான் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்.

15 வருடம்

15 வருடம்

இவருக்கு 15 வருடம் அனுபவம் உள்ளது. அதேபோல் பெங்களூர் அணியின் தற்போதைய கோச்சாக இருக்கும் சைமன் கடிச் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். கோலிக்கு இவர் மிகவும் நெருக்கம் என்பதால் இவரும் இந்திய அணியின் கோச் ஆகும் வாய்ப்பு உள்ளது.

டிராவிட்

டிராவிட்

அதேபோல் இந்திய ஏ அணியின் கோச்சாக இருக்கும் டிராவிட்டை இந்திய அணியின் கோச்சாக நியமிக்க ஆலோசனை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் டி 20 உலகக் கோப்பைக்கு முன் கோச்சை மாற்றினால் சரியாக இருக்காது. அதனால் உலகக் கோப்பை முடியும் வரை ரவி சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, January 6, 2021, 11:16 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+