Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி அஸ்வின், தினேஷ் கார்த்திக் டி20 அணியில் கிடையாது.. தேர்வுக்குழு தகவல்..புதிய அணி உருவாக்கப்படும்

மும்பை : இனி புதிய டி20 அணியை உருவாக்கப்போவதாக தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். டி20 உலககோப்பை வரும் 13ஆம் தேதி முடிவடைகிறது

இதனைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதி இந்திய அணி , நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பலமான பேட்டிங்

பலமான பேட்டிங்

இந்த நிலையில் தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைத்துள்ளது. இதே போன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதராக டக் அவுட் ஆகிய தீபக் ஹூடாவும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இதில் நடுவரிசையில் ஹர்திக் மற்றும் ரிஷப் பண்ட்டும் இருக்கிறார்கள்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

இதனால், இந்திய அணியின் பேட்டிங், நியூசிலாந்து தொடரில் பலம் வாய்ந்த பேட்டிங்காக உள்ளது. இதே போன்று சுழற்பந்துவீச்சாளராக சாஹல், குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர் சுழற்பந்துவீச்சாளராக வாசிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பநதுவீச்சாளராக ஹர்சல் பட்டேல், சிராஜ், புவனேஸ்வர் குமார் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அணி

புதிய அணி

இது குறித்து பேசிய தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, டி20 உலககோப்பை முடிந்த உடன் புதிய டி20 அணியை உருவாக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கையை நியூசிலாந்து தொடரிலேயே பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனால் 35 வயதுக்கு மேல் உள்ள வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் முதல் பணியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், ஆர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல்,முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக்

Story first published: Tuesday, November 1, 2022, 12:22 [IST]
Other articles published on Nov 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+