Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பட்டாசு வெடிக்க இப்படி மாறிட்டாரே அந்த மனுஷன்.. மோக்கா.. மோக்கா விளம்பரத்தின் திடீர் ட்விஸ்ட்

டெல்லி: இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளால் பட்டாசு வெடிக்க முடியாத பாகிஸ்தான் ரசிகர், இறுதியில், இந்தியாவுக்கு ஆதரவாளராக மாறுவதைப் போல வெளியாகியுள்ளது ஸ்டார் டிவியின் புதிய மோக்கா.. மோக்கா விளம்பரம்.

உலக கோப்பையை முன்னிட்டு, மோக்கா.. மோக்கா என்ற பெயரிலான விளம்பர தொடர்களை ஸ்டார் டிவி வெளியிட்டு வருகிறது. உலக கோப்பையில் பாகிஸ்தான், இதுவரை இந்தியாவை வென்றதில்லை என்பதை குறிப்பிடுவதற்காக, பாகிஸ்தான் ரசிகர் பட்டாசு பெட்டியுடன் இரு தலைமுறைகளாக காத்திருப்பதாக அந்த விளம்பரத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது.

தென் ஆப்பிரிக்காவுடன்

தென் ஆப்பிரிக்காவுடன்

பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் இந்தியா வெற்றி பெற்றதால், அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது, அடுத்த விளம்பரத்தை வெளியிட்டது ஸ்டார் டிவி குரூப். அதில், இதற்கு முன்பு 3 முறை உலக கோப்பை போட்டிகளில், தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியதில்லை என்பது கேலி செய்யப்பட்டது.

யு.ஏ.இ அணியையும் விடவில்லை

யு.ஏ.இ அணியையும் விடவில்லை

தென் ஆப்பிரிக்காவையும், இந்தியா அபாரமாக வீழ்த்தியது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு அந்த ரசிகர் சப்போர்ட் செய்வது போல ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. யு.ஏ.இயையும் எளிதில் வீழ்த்தியது இந்தியா. இதன்பிறகு ஹோலியைுயம், வெஸ்ட் இண்டீசுடனான போட்டியையும் ஒப்பிட்டு ஒரு விளம்பரத்தை வெளியிட்டது ஸ்டார் டிவி.

ஹோலி கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம்

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் போட்டியையும், இந்தியா வென்று அசத்தியது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, அடுத்ததாக வரும் 10ம்தேதி, அயர்லாந்துக்கு எதிராக மோத உள்ளது. இந்நிலையில் புதிதாக ஒரு ஒரு விளம்பரத்தை தற்போது ஸ்டார் டிவி வெளியிட்டுள்ளது.

மாற்றிவிட்டார்கள்

மாற்றிவிட்டார்கள்

இந்த விளம்பரப் படத்தில், இதுவரை இந்தியாவுக்கு எதிராகவே பட்டாசு பெட்டிகளுடன் சுற்றித்திருந்த அந்த ரசிகர், வேறு வழியின்றி, இந்திய ரசிகராகிவிட்டதை போலவும், இந்தியாவின் சீருடையை அணிந்துள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளது. இனியாவது பட்டாசு வெடிக்கலாமே என்ற ஆசையில் அந்த மனுஷன் இப்படி மாறிவிட்டாராம்.

பட்டாசு வெடிப்பாரா..

அதெல்லாம் சரிதான்.. இத்தனை நாட்களாக அந்த நபர் இந்தியாவை எதிர்த்து வந்தார், இந்தியா வென்று வந்தது. இப்போது அந்த விளம்பர நபர் இந்தியாவுக்கு ஆதரவாக மாறிவிட்டாரே, போட்டியின் ரிசல்ட்டும் அப்படியே உல்டா ஆகிவிட்டால் என்ன செய்வது என்பதே இப்போது ரசிகர்கள் கவலை.

Story first published: Saturday, March 7, 2015, 14:42 [IST]
Other articles published on Mar 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+