கால்பந்து வீரராக மாறிய சஞ்சு சாம்சன்.. புத்தாண்டில் எடுத்த திடீர் முடிவு.. தீயாக பரவும் வீடியோ
திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் அணியில் திறமை வாய்ந்த வீரராக கருதப்பட்டு போதிய வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடிய வீரர் என்றால் அது சஞ்சு சாம்சன் தான். கேரளாவைச் சேர்ந்த 29 வயதான சஞ்சு சாம்சன் ipl தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக விளங்குகிறார்.
சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் எட்டு ஆண்டுகளில் அவர் வெறும் 24 t20 மற்றும் 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தான் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்.

இதன் மூலம் அவருக்கு எவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அத்திப்பூத்தா போல் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
இதன் மூலம் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தாயகம் திரும்பிய சாம்சன் திடீரென்று கேரளாவில் கால்பந்து போட்டியில் ஒரு வீரராக களமிறங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். கேரளாவில் செவன் டோர்னமெண்ட் என்ற பிரசித்தி பெற்ற கால்பந்து தொடர் நடைபெறும்.
இதில் சஞ்சு சாம்சன் ஒரு வீரராக பங்கேற்று கால்பந்து விளையாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சஞ்சு சாம்சன் கால்பந்து பக்கம் திரும்பி விட்டாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் அங்கு கால்பந்து பிரபலம் என்ற காரணத்தினால் சஞ்சு சஞ்சனும் தன்னுடைய ஓய்வு நேரத்தில் இதனை விளையாடி இருக்கலாம்.
எப்படி தோனி போன்ற வீரர்கள் எல்லாம் டென்னிஸ் விளையாட்டை விளையாடுகிறார்களோ அதே போல் சஞ்சு சாம்சன் கால்பந்து போட்டியில் விளையாடி உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வரும் புத்தாண்டில் சஞ்சு சாம்சனை இனி அடிக்கடி கால்பந்து போட்டிகளில் நாம் பார்க்கலாம்.
Story first published: Sunday, December 31, 2023, 22:04 [IST]
Other articles published on Dec 31, 2023


Click it and Unblock the Notifications