Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 அரையிறுதி தோல்வி எதிரொலி..ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு குட்பை: எலியட் அறிவிப்பு !

ஆக்லாந்து: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கிரான்ட் எலியட் அறிவித்துள்ளார்.

டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக எலியட் அறிவித்துள்ளார்.

New Zealand allrounder Grant Elliott retires from ODI

ஆல்ரவுண்டரான எலியட், 83 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1976 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 சதம், 11 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

37 வயதான எலியட் நியூசிலாந்தின் மண்ணின் மைந்தன் கிடையாது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து விடைபெற்று நியூசிலாந்தில் தஞ்சம் புகுந்தது 2001ம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் எலியட்.

இவர் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற காரணம், திறமையிருந்தும், அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததுதான். ஏனெனில், தென் ஆப்பிரிக்காவில் 1998 முதல் கிரிக்கெட் அணி தேர்விலும் இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. இனங்களின் அடிப்படையில் அங்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

இட ஒதுக்கீடு நடைமுறையால் நன்மைகள் விளைந்ததை போல, இப்படி தீமைகளும் ஏற்படுகின்றன போலும்.

Story first published: Friday, April 1, 2016, 20:25 [IST]
Other articles published on Apr 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+