வெலிங்டன்: இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. மேலும் இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத இருக்கின்றன.

ஆக்லாந்தில் பிப்ரவ்ரி 6ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 14-ந் தேதியன்று வெலிங்டனில் நடைபெற இருக்கிறது.
இப்போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்: மெக்கல்லம் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், பீட்டர் புல்ட்டன், ஹமிஷ் ரூதர்போர்டு, ஜெஸ்ஸி ரைடர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், பிராட்லி ஜான் வாட்லிங், கேன் வில்லியம்சன்.