“இது அதுல..!!” ஹென்ரி நிக்கோல்ஸின் விசித்திர விக்கெட்.. 18 ஆண்டுக்கு பின் அச்சு அசலாக நடந்த சம்பவம்
லீட்ஸ்: நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸின் வினோத விக்கெட்டை, ஆண்ட்ரூ சைமண்ட்ஸுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸில் தொடங்கியது.
இந்த போட்டியின் முதல் நாளன்றே விசித்திரமான சம்பவம் ஒன்று நியூசிலாந்து அணியில் அரங்கேறியது.

நிக்கோல்ஸ் விக்கெட்
நியூசிலாந்து அணி பேட்டிங்கின் போது, ஹென்ரி நிகோலஸ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் வீசிய பந்தை ஹென்ரி ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிக்க முயன்றார். ஆனால் பந்தானது நான் ஸ்ட்ரைக்கரில் நின்றிருந்த டேர்லி மிட்செலை நோக்கி வேகமாக சென்றது.

வினோதமான விக்கெட்
பதற்றத்தில் நகர்ந்த டேர்லி, தனது பேட்டையும் நகர்த்த மறந்துவிட்டார். இதனால் பந்து நேராக அவரின் பேட்டில் பட்டு, மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த ஃபீல்டரிடம் அழகான கேட்ச்-ஆக மாறியது. இவ்வளவு விசித்திரமான விக்கெட்டால் ஹென்ரி நிகோலாஸ் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

ரசிகர்களின் ஒப்பீடு
இந்நிலையில் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு அச்சு அசலாக இதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி ஆஸ்திரேலியா - இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் ஜேஹன் முபாராக் வீசிய 40 ஓவரின் 2வது பந்தை ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஸ்ட்ரைட் ட்ரைவ் அடித்தார்.

அதே முடிவு தான்
இன்று நடந்ததை போலவே பந்து நேராக நான் ஸ்ட்ரைக்கரில் நின்றிருந்த மைக்கேல் க்ளார்கின் கால்களில் பட்டு எகிறியது. அப்போது மிட் விக்கெட்டில் நின்றிருந்த டில்சனிடம் அழகாக கேட்ச்சானது. சைமண்ட்ஸ் ஆடிய கிரிக்கெட்டில் மறக்க முடியாத விக்கெட் அதுவாகும்.


Click it and Unblock the Notifications