For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் டி20 தரவரிசையில் நம்பர் 1 இடம் பறிப்போகும் அபாயம ஏற்பட்டுள்ளது.

டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பனிப் பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா அசத்தல்

இந்தியா அசத்தல்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. ஃபின் ஆலன் 35 ரன்களும், மார்க் சாம்மேன் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வாசிங்டன் சுந்தர் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கிளன் பிலிப்ஸ் மற்றும் பின் ஆலன் ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். கிளன் பிலிப்ஸ் 17 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுணையில் நெருக்கடி அதிகரிக்க சிஎஸ்கே வீரர் கான்வே 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

 சொதப்பிய ஆர்ஸ்தீப்

சொதப்பிய ஆர்ஸ்தீப்

பிரஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 19 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து கடைசி ஓவரை ஆர்ஸ்தீப் சிங் வீசினார். முதல் பந்து நோ பாலாக வீச, டேரல் மிட்செல் சிக்சர் அடித்தார்.இதனையடுத்து அடுத்த 2 பந்திலும் சிக்சர்களும், பவுண்டரியும் பறக்கவிட அந்த ஓவரில் மட்டும் நியூசிலாந்து அணி 27 ரன்களை அடித்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

தடுமாறிய டாப் ஆர்டர்

தடுமாறிய டாப் ஆர்டர்

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சுப்மான் கில் 7 ரன்களிலும், இசான் கிஷன் 4 ரன்களிலும், ராகுல் திரிபாதி டக் அவுட்டாகியும் வெளியேற, இந்திய அணி 15 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஜோடி தோல்வியை தவிர்க்க போராடினர்.

வாசிங்டன் ஆட்டம் வீண்

வாசிங்டன் ஆட்டம் வீண்

முக்கிய கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களிலும், அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா 10 ரன்களில் வெளியேற, வாசிங்டன் சுந்தர் மட்டும் தனி ஆளாக போராடி 28 பந்தில் அரைசதம் விளாசி பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் துணை நிற்காததால் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஆர்ஸ்தீப் மட்டும் கடைசியில் 27 ரன்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்திய அணி வென்று இருக்கும்.

Story first published: Friday, January 27, 2023, 23:15 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
New Zealand beat India by 21 runs and takes a lead 1-0 6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+