Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தேர்வாகியிருக்கு... இந்தியா ஆன் தி வே!

டெல்லி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தேர்வாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை 2க்கு 0 என்ற கணக்கில் வெற்றி கொண்டால் இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தேர்வு

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தேர்வு

ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இருந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கொரோனாவால் தொடர் ரத்து

கொரோனாவால் தொடர் ரத்து

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் கொரோனா காரணமாக தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே இந்திய அணி தற்போது விளையாடவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இறுதிப்போட்டிக்கு நியூசி. தேர்வு

இறுதிப்போட்டிக்கு நியூசி. தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 71.7 சதவிகிதத்துடன் முதலிடத்திலும் நியூசிலாந்து அணி 70 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் 69.2 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி 3வது இடத்திலும் உள்ள நிலையில், புள்ளிகள் மற்றும் போட்டிகள் அடிப்படையில் நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

பின்தங்கிய ஆஸ்திரேலியா

பின்தங்கிய ஆஸ்திரேலியா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று அதில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டிருந்தால் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருக்கக்கூடிய சாத்தியங்கள் இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த தொடர் ரத்தாகியுள்ளதால் நியூசிலாந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேன் வில்லியம்சன் காரணம்

கேன் வில்லியம்சன் காரணம்

கடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேறியது. இந்நிலையில் தற்போது இறுதிப்போட்டிக்கும் தேர்வாகியுள்ளது. இதற்கு அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

Story first published: Tuesday, February 2, 2021, 18:36 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+