Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா சாமி.. தலையில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி! கிரிக்கெட் உலகை மிரள வைத்த நியூசி. வீரர்!

கேன்டர்பரி : நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ எல்லிஸ் உள்ளூர் டி20 தொடரின் போது தலையில் ஹெல்மட் அணிந்து பந்து வீசியது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

தனக்கென பிரத்தேயகமான ஹெல்மட் ஒன்றை தயாரித்து அணிந்து கொண்டு வந்த அவரை பார்த்து கிரிக்கெட் உலகம் மிரண்டு போனது. ஆனால், அவரது நிலைமையில் இருந்து பார்த்தால், அப்படி ஹெல்மட் அணிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆண்ட்ரூ எல்லிஸ்

ஆண்ட்ரூ எல்லிஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ எல்லிஸ் வேகப் பந்துவீச்சாளர் ஆவார். சர்வதேச அளவில் 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.

உள்ளூர் டி20 போட்டி

உள்ளூர் டி20 போட்டி

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் கேண்டர்பரி அணிக்காக ஆடிய எல்லிஸ், ஆக்லாந்து அணிக்கு எதிராக பந்து வீசினார்.

தலையில் அடித்த பந்து

தலையில் அடித்த பந்து

ஆக்லாந்து அணியின் ஜீத் ராவல் பந்தை அதிரடியாக தாக்கினார். பந்து மின்னல் வேகத்தில் எல்லிஸ் தலையில் அடித்து, நேராக சிக்ஸர் பறந்தது. தலையில் அடித்த பின்னும் பந்து சிக்ஸர் பறக்கிறது என்றால் அந்த தாக்குதல் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

நடவடிக்கை

நடவடிக்கை

அப்போது எல்லிஸ் உடனடியாக மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொண்டு ஆடினாலும், அவர் பந்துவீச்சாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை சுட்டிக் காட்டி, உடனடி நடவடிக்கை தேவை எனக் கூறினார்.

உலகுக்கு முன்னோடி

உலகுக்கு முன்னோடி

இந்த விவகாரத்தில் உலகுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என அப்போது கூறிய அவர், தன் வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சீசனில் தனக்கென தயாரிக்கப்பட்ட ஹெல்மட் அணிந்து ஆடினார்.

ஹெல்மட்

பேஸ்பால் போட்டிகளில் வீரர்கள் அணிந்து ஆடும் ஹெல்மட் போன்றே இருந்த இந்த ஹெல்மட், எடை குறைவாக இருந்தது. அதே போல, வெளியில் தெளிவாக பார்க்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

வாரன் பார்னஸ் அணிந்த ஹெல்மட்

கடந்த டிசம்பர் 2017இல் ஒடாகோ அணியின் வேகப் பந்துவீச்சாளர் வாரன் பார்னஸ் முதன்முறையாக ஹெல்மட் அணிந்து பந்துவீசினார். ஆனால், அது பைக் ஓட்டுபவர்கள் அணியும் ஹெல்மட் போன்று இருந்தது.

பந்துவீச்சாளர்களுக்கு ஹெல்மட்

பந்துவீச்சாளர்களுக்கு ஹெல்மட்

தற்போது எல்லிஸ் அணிந்துள்ள ஹெல்மட் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருப்பதால் விரைவில் இது பயன்பாட்டுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

காலம் வரும்

காலம் வரும்

அம்பயர்கள் சிலர் கூட டி20 போட்டிகளின் போது ஹெல்மட் அணிந்தும், பந்தை தடுக்கும் உபகரணங்களை வைத்துக் கொண்டும் களத்தில் நிற்கும் காட்சிகள் இயல்பான ஒன்றாக மாறி வரும் நிலையில், பந்துவீச்சாளர்களும் ஹெல்மட் அணியும் காலம் விரைவில் வரும்.

Story first published: Thursday, November 28, 2019, 20:35 [IST]
Other articles published on Nov 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+