Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா -நியூசிலாந்து டி20 தொடர் - அணியில் இணைந்த ஹமீஷ் பென்னட்

Recommended Video

IND VS NZ T20 Series 2020 | New Zealand squad announced

வெல்லிங்டன் : நியூசிலாந்தில் இம்மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியினர் சர்வதேச டி20 போட்டித் தொடரில் மோதவுள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் வரும் 24ம் தேதி துவங்கவுள்ளது.

இந்த தொடரில் காயம் காரணமாக ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள்
இடம்பெறாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹமீஷ் பென்னட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்காத ஹமீஷ் பென்னட் இந்தியாவுடனான இந்த தொடரின் மூலம் தன்னுடைய முதல் டி20 போட்டியை துவக்கி வைக்கவுள்ளார்.

5 சர்வதேச டி20 போட்டிகள்

5 சர்வதேச டி20 போட்டிகள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வரும் 24ம் தேதி ஆக்லாந்தில் முதல் சர்வதேச டி20 போட்டி துவங்கவுள்ளது. இந்த தொடரில் 5 டி20 போட்டிகளை நியூசிலாந்துடன் இந்தியா ஆடவுள்ளது.

அடுத்ததாக நியூசிலாந்திற்கு பயணம்

அடுத்ததாக நியூசிலாந்திற்கு பயணம்

இலங்கையுடன் சர்வதேச டி20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவுடன் சர்வதேச ஒருநாள் தொடரை விளையாடி வருகின்றனர். இதையடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 சர்வதேச டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளனர்.

தயாராகிவரும் நியூசிலாந்து

தயாராகிவரும் நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவுடனான தொடரையடுத்து இந்தியாவுடன் மோத நியூசிலாந்து தற்போது தயாராகிவருகிறது. இதற்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் இணைந்த ஹமீஷ் பென்னட்

அணியில் இணைந்த ஹமீஷ் பென்னட்

காயம் காரணமாக நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன் போன்றவர்கள் அணியில் இடம்பெறாத நிலையில், அவர்களுக்கு மாற்றாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் ஹமீஷ் பென்னட் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்வதேச டி20 போட்டியில் முதல் போட்டி

சர்வதேச டி20 போட்டியில் முதல் போட்டி

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ள ஹமீஷ் பென்னட், இதுவரை சர்வதேச டி20 போட்டிகளை விளையாடியதில்லை. இந்நிலையில், இந்தியாவுடனான தனது முதல் சர்வதேச டி20 போட்டியை அவர் விளையாடவுள்ளார்.

டிம் சவுதி உள்ளிட்ட வீரர்கள்

டிம் சவுதி உள்ளிட்ட வீரர்கள்

டிம் சவுதி, பிளேர் டிக்னர், ஸ்காட் குகலீஜ்ன், மிட்செல் சான்ட்னர் உள்ளிட்ட நியூசிலாந்து பௌலர்களுடன் ஐசிசி தரவரிசையில் ஹமீஷ் பென்னட்டும் இடம் பிடித்துள்ளார்.

Story first published: Thursday, January 16, 2020, 17:47 [IST]
Other articles published on Jan 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+