Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை வீழ்த்திய எங்களின் செம பிளான் இதுதான்.. உண்மையை போட்டுடைத்த நியூசிலாந்து கோச்!

துபாய்: துபாயில் நடந்த வாழ்வா? சாவா? என்ற முக்கியமான போட்டியில் இந்தியாவை கதற வைத்துள்ளது நியூசிலாந்து. பவுலிங், பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கண்டுள்ளது.

இந்தியாவின் மோசமான செயல்பாடு குறித்து பேசும் இந்த நேரத்தில் நியூசிலாந்து அணியின் பெஸ்ட் பெர்பாமன்ஸ் பற்றியும் பேசியே ஆக வேண்டும். என்னதான் டாஸ் ஜெயித்த மகிழ்ச்சி உங்களுக்குள் இருந்தாலும் சிறப்பாக விளையாடினால்தான் மேட்ச்சை வெல்ல முடியும்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

நேற்று இதைத்தான் செய்து காட்டினார்கள் நியூசிலாந்து வீரர்கள். இந்தியாவின் பதற்றத்தை நன்கு பயன்படுத்தி கொண்ட டிரெண்ட் போல்ட், செளதீ, இஷ் சோதி, மில்னே ஆகியோர் இந்தியாவின் விக்கெட்டுகளை கட்டுக்கட்டாக சரித்தனர். பவர்பிளேயில் சாண்ட் னர் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தியது எல்லாம் தரமான சம்பவமாகும்.

சூப்பர் டூப்பர் நியூசிலாந்து

சூப்பர் டூப்பர் நியூசிலாந்து

பேட்டிங்கில் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தார் மிட்செல். சரியான நேரத்தில் சரியான பவுலர்களுக்கு ஓவர்கள் கொடுத்து, கனகச்சிதமான பீல்டிங் அமைத்து சிறப்பான கேப்டன்சியும், அருமையான பேட்டிங்கும் செய்தார் கனே வில்லியம்சன். மொத்தத்தில் சூப்பர் டூப்பராக செயல்பட்டனர் நியூசிலாந்து பிளேயர்ஸ். இந்த நிலையில் இந்தியாவை 110 ரன்களுக்குள் அடக்கிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைப் நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Recommended Video

Indian Team-ன் நிலைக்கு IPL தான் காரணம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்
மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்தியா போன்ற தரமான வீரர்கள் நிறைந்த அணியை 110 ரன்களுக்கு கட்டுப்படுத்துவது உண்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திட்டமிட்டு யார் யார் எப்போது பந்து வீச வேண்டும்? எந்த இடத்தில் பந்து வீச வேண்டும்? என்பதை செயல்படுத்தினோம். டி20 கிரிக்கெட்டில் நான் நியூசிலாந்து அணியுடன் பணியாற்றும் காலத்தில் மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். பந்துவீச்சு முயற்சி முற்றிலும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அது நடந்து விட்டது. அதன்பின்னர் அணியின் பேட்டிங் உண்மையில் மகத்துவமானது என்று பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார்.

 உத்வேகத்தை தொடர வேண்டும்

உத்வேகத்தை தொடர வேண்டும்

நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு குறித்து கூறிய அவர், 'ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதே உத்வேகத்தை தொடர வேண்டும். வெற்றி பெறாத அணி அரையிறுதிக்கு செல்வது மிகவும் கடினமாக இருக்கும்' என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறினார்.

''நிகர ரன் ரேட் எப்போதும் முக்கியமானது. இதில் ஆப்கானிஸ்தான் தற்போது ஒரு பெரிய முன்னிலை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதற்கு முன் இரண்டு ஆட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். மூன்று அணிகளையும் வீழ்த்துவதே எங்கள் இலக்கு. ஆனாலும் இந்த அணிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' என்றும் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்தார்.

Story first published: Monday, November 1, 2021, 19:45 [IST]
Other articles published on Nov 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+