For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து.. 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..ஃபாலோ ஆன் பெற்றும் அபாரம்

கிறிஸ்ட்சர்ச் : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஃபாலோ ஆன் பெற்றும் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

முதல் டெஸ்டை இங்கிலாந்து வென்ற நிலையில், பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதில் ஷாக் பிராலி, பென் டக்கட் மற்றும் போப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அபாரம்

இங்கிலாந்து அபாரம்

இதனையடுத்து 21 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில், ஜோடி சேர்ந்த ஜோ ரூட், ஹாரி புருக் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 435 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.

டிம் சௌதி அதிரடி

டிம் சௌதி அதிரடி

இதனையடுத்து முதல் இன்னிங்சில் நியூசிலாந்து விளையாடியது.இதில் வில்லியம்சன் 4 ரன்களிலும், வில் யங் 2 ரன்களிலும் , கான்வே டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் டிம் சௌதி அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஃபாலோ ஆன்

ஃபாலோ ஆன்

தாம் வரலாற்று பிழை செய்கிறோம் என்பதை தெரியாமல் பென் ஸ்டோக்ஸ் ஃபாலோ ஆன் கொடுத்தார். இன்னிங்ஸ் வித்தியாசத்தில் சுருட்டிவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்துக்கு, நியூசிலாந்து வீரர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். . 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் கடும் நெருக்கடியில் நியூசிலாந்து அணி களமிறங்கியது.இதில் முதல் விக்கெட்டுக்கு டாம் லாத்தம் மற்றும் கான்வே ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

நியூசி பதிலடி

நியூசி பதிலடி

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 149 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். வில் யங் 8 ரன்களில் வெளியேற, அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் தாம் ஏன் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்தார். இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட வில்லியம்சன், 132 ரன்களை விளாசினார்.இதே போன்று டேரல் மிட்செல் 54 ரன்களும், டாம் பிளாண்ட 90 ரன்களும் எடுத்தனர். இதன்காரணமாக நியூசிலாந்து அணி 483 ரன்களை குவித்தது.

 சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. இந்த நிலையில் 5வது நாள் ஆட்டத்தை 48 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி தொடங்கியது. பென் டக்கட் 33 ரன்களும், ராபின்சன் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புருக் டக் அவுட் ஆனார்.

வெக்னர் அசத்தல்

வெக்னர் அசத்தல்

ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற இலக்குடன் இங்கிலாந்து தடுமாறிய போது ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். வெற்றிக்கு 57 ரன்களே தேவைப்பட்ட நிலையில், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வெக்னர், ஷாட் பந்துகளை பயன்படுத்தி இங்கிலாந்து பேட்டிங்கை சிதறடித்தார். ஸ்டோக்ஸ் 33 ரன்களிலும், ஜோ ரூட் 85 ரன்களிலும் வெக்னர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

வரலாற்று வெற்றி

வரலாற்று வெற்றி

பென் ஃபோக்ஸ் 35 ரன்களிலும் , பிராடு 11 ரன்களிலும் எடுத்த நிலையில், முக்கிய கட்டத்தில் வெளியேறினர். இங்கிலாந்து வெற்றிக்கு 7 ரன்களும், நியூசிலாந்து வெற்றிக்கு 1 விக்கெட்டும் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பின் உச்சக் கட்டத்திற்கு சென்றது. வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஃபாலோ ஆன் பெற்றும் , ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரையும சமன் செய்தது.

Story first published: Tuesday, February 28, 2023, 10:52 [IST]
Other articles published on Feb 28, 2023
English summary
New Zealand created history by beating Eng by 1 runs after follow on
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+