Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: நியூசிலாந்து டி20 அணியில் பிரஸ்வெல் விலகல்.. பந்துவீச்சில் கலக்கிய வீரருக்கு வாய்ப்பு

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் தசைப் பிடிப்பு அவருக்கு ஏற்பட்டது. இத்தொடர் புதன்கிழமை நாக்பூரில் தொடங்குகிறது. காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்தை வெற்றிபெற வழிநடத்தியவர் பிரேஸ்வெல். அவர் மற்ற டி20 அணியினருடன் நாக்பூருக்குப் பயணம் செய்துள்ளார். "அடுத்த சில நாட்களில் சிகிச்சை பெற்று கண்காணிக்கப்படுவார், அதன் பின்னரே அவரது தொடர் பங்களிப்பது குறித்த முடிவு உறுதி செய்யப்படும்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இதை தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் உறுதிப்படுத்தினார்.

இதனால் மாற்று வீரராக கிறிஸ்டியன் கிளார்க், இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்காக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சர்வதேச அறிமுகத்தைச் செய்த கிளார்க், இருமுறை தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்தின் வெற்றிக்கு பேட்டிங்கிலும் பயனுள்ள பங்களிப்பைச் செய்தார்.

இது குறித்து பேசிய நியூசிலாந்து அணி பயிற்சியாளர் ராப் வால்டர், “சில வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளனர். சிலர் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டிலிருந்து நேரடியாக இணைந்துள்ளனர். மற்றவர்கள் இந்தியா ஒருநாள் தொடர் மற்றும் சூப்பர் ஸ்மாஷ் போட்டிகளிலிருந்து வந்துள்ளனர். இந்தத் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களுக்கு போதுமான வேகப்பந்து வீச்சுத் தேர்வுகள் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்" என்று வால்டர் கூறினார்.

"கிறிஸ்டியன், அவரது முதல் இந்தியச் சுற்றுப்பயணத்தில் குழுவுடன் இன்னும் சற்று காலம் தங்கியிருக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவர் ஒருநாள் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், குறிப்பாக அவரது அமைதியான குணம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் செயல்படும் திறன் மிகவும் வியக்கத்தக்கது" என்று பாராட்டினார்.

"டி20 தொடருக்குக் குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளதால், புதன்கிழமை இரவு நடைபெறும் தொடக்க ஆட்டத்திற்குத் தயாராக நாங்கள் விரைவாக மீண்டு வந்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியில் மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, சாக் ஃபௌல்கஸ் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். ஜேம்ஸ் நீஷம் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராக அணியில் இடம்பிடித்துள்ளார்.நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, சாக் ஃபௌல்கஸ், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், இஷ் சோதி, கிறிஸ்டியன் கிளார்க் (முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும்).

Story first published: Tuesday, January 20, 2026, 16:29 [IST]
Other articles published on Jan 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+