Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம்.. நியூசிலாந்து அபார வெற்றி.. செப்பர்ட் அதிரடி 50

சென்னை: டி20 உலககோப்பை குரூப் டி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பரபரப்பான இந்தப் போட்டியில், 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை 13 பந்துகள் எஞ்சிருக்க எட்டி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

சென்னையில் நடந்த முதல் லீக ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. குறிப்பாக குலாப்தீன் நைப் 35 பந்துகளில் நான்கு சிக்ஸர், 3 பவுண்டரி என 63 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் செப்பர்ட், இந்த ஆட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்தார். 39 பந்துகளில் 55 ரன்கள் குவித்து தனது முதல் டி20 உலகக் கோப்பை அரை சதத்தைப் பதிவு செய்தார். முன்னதாக, 48 ரன்களில் இருந்தபோது ரஷித் கான் அவரை டிராப் செய்தது, ஆப்கானிஸ்தானுக்குப் பெரும் இழப்பாக அமைந்தது.

எனினும், முகமது நபி வீசிய அடுத்த பந்திலேயே செப்பெர்ட் கேட்ச் ஆகி வெளியேறினார். இது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. செய்பெர்ட்டின் விக்கெட் விழுந்த பிறகு, களமிறங்கிய டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னருடன் இணைந்து நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார்.

மார்க் சாப்மேன், 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையில், அஸ்மத்துல்லா ஒமர்சாய் வீசிய ஸ்லோ பந்தில் வெளியேறினார். அப்போது நியூசிலாந்து அணிக்கு 26 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் களத்தில் டேரில் மிட்செலுடன் இணைந்தார். இறுதியில் சாண்ட்னர், டேரல் மிட்செல் ஜோடி 17.5 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

Story first published: Sunday, February 8, 2026, 14:45 [IST]
Other articles published on Feb 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+