Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜஸ்ட் மிஸ்”.. கடைசி நேரத்தில் கிடைக்காத அதிர்ஷ்டம்.. நியூஸி,க்கு எதிரான முதல் டெஸ்ட் டிரா!

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்று சமனில் முடிவடைந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை எடுத்தது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் சீனியர் வீரர்கள் சொதப்பிய நிலையில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து (105) அசத்தினார். இதே போல சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் விளாசினர். இதன் பின்னர் முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. டாம் லாதம் 95 ரன்கள் மற்றும் வில் யங் 89 ரன்கள் விளாச அந்த அணி 296 ரன்கள் குவித்தது.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் மீண்டும் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது. தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ரகானே என அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினர். இதனால் தடுமாறி வந்த இந்திய அணியை மீண்டும் ஒருமுறை ஸ்ரேயாஸ் ஐயர் காப்பாற்றினார். 125 பந்துகளை சந்தித்த அவர் 65 ரன்கள் அடித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த சாஹா 61 ரன்கள் குவிக்க இந்திய அணி 234 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

நிதான தொடக்கம்

நிதான தொடக்கம்

இதனால் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதானமான தொடக்கத்தை கொடுத்தது. டாம் லாதம் (52), வில்லியம் சோமர்வில்லே (36) என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 125 ரன்களுக்கு 4 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை சரித்தனர் இந்திய ஸ்பின்னர்கள்.

கடைசி ஓவர் வரை பரபரப்பு

கடைசி ஓவர் வரை பரபரப்பு

ரன்களை குவிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி 155 ரன்களுக்கெல்லாம் 9 விக்கெட்களை இழந்துவிட்டது. கடைசி 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டை எடுத்துவிட்டால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால் அதற்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் நிலைத்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். 91 பந்துகளை சந்தித்த ரச்சின் ரவீந்திரா 18 ரன்களை அடித்து சிறப்பான தடுப்பாட்டத்தை கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக அஜாஸ் பட்டேலும் இருந்ததால் இந்திய அணியால் கடைசி விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இறுதியில் போட்டி சமனில் முடிவடைந்தது.

Recommended Video

IND vs NZ 1st Test: Kiwis Escape with a Draw in Kanpur | OneIndia Tamil
சிறப்பான பவுலிங்

சிறப்பான பவுலிங்

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்கள், ரவீந்திர ஜடேஜா 5, அக்‌ஷர் பட்டேல் 6, உமேஷ் யாதவ் 2 விக்கெட்களை கைப்பற்றினர். 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3ம் தேதியன்று மும்பையில் நடைபெறவிருக்கிறது.

Story first published: Monday, November 29, 2021, 20:58 [IST]
Other articles published on Nov 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+