Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ரஷர் போட்டு அவுட்டாக்கினோம்... விராட்கோலி அவுட் ரகசியம் சொல்லும் டிரெண்ட் போல்ட்

கிறிஸ்ட்சர்ச் : இந்திய கேப்டன் விராட் கோலியை திட்டம்போட்டு நெருக்கடி கொடுத்து அவுட்டாக்கியதாக நியூசிலாந்து பௌலர் ட்ரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND VS NZ 2ND TEST | New zealand beat India by 7 wickets

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்திய அணி இதுவரை 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

இந்த தொடரின் 4 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 38 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தன்னுடைய முதல் இடத்தை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்திடம் இழந்துள்ளார்.

சொதப்பிவரும் இந்திய அணி

சொதப்பிவரும் இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. போட்டியின் இரண்டாவது நாளில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை விளையாடிவரும் இந்திய அணி, 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

மொத்தம் 38 ரன்கள்

மொத்தம் 38 ரன்கள்

இந்த டெஸ்ட் தொடரில் மட்டுமின்றி முந்தைய சர்வதேச ஒருநாள் தொடரிலும் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டங்களையே பதிவு செய்துள்ளார். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரின் 4 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 38 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஒரு போட்டியிலும் 20 ரன்களை கூட அவரால் எட்ட முடியவில்லை.

விராட் கோலிக்கு நெருக்கடி

விராட் கோலிக்கு நெருக்கடி

இந்நிலையில் 4 இன்னிங்சிலும் சொற்ப ரன்களுக்கு விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கொண்டாட்டத்தில் நியூசிலாந்து பௌலர்கள்ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், கேப்டன் விராட் கோலிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து அவரது விக்கெட்டை வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகமில்லை -போல்ட்

சந்தேகமில்லை -போல்ட்

சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டக்காரர் விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ள டிரெண்ட் போல்ட், பவுண்டரி பந்துகளை போட்டு, அதன்மூலம் கோலியை சில தவறுகளை செய்யவைத்து நெருக்கடிக்கு உள்ளாக்கி அவுட்டாக்கியதாக தெரிவித்துள்ளார். அவரைஅவுட்டாக்கியது சிறப்பான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அட்ஜஸ்ட் செய்வது கடினம்

அட்ஜஸ்ட் செய்வது கடினம்

இந்தியாவில் கீழ் மற்றும் மெதுவான பந்துகளை எதிர்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்தின் பிட்ச்களையும், பௌலர்களின் ஷார்ட் பந்துகளையும் எதிர்கொள்வது கடினமானது என்று தெரிவித்துள்ளார். அதற்கு காலம் பிடிக்கும் என்றும், தங்களுக்கும் இந்தியாவின் பிட்ச்களை சமாளிப்பது சிரமமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

டிரெண்ட் போல்ட் கருத்து

டிரெண்ட் போல்ட் கருத்து

எதிரணி வீரர்களை அவுட்டாக்குவது குறித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகவும் தெளிவாக உள்ளதாகவும், திட்டமிட்டு அவர்களை பெவிலியனுக்கு அனுப்புவதில் அதிக சிரத்தை மேற்கொண்டு அதை செயல்படுத்தி வருவதாகவும் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார். இரண்டாவது நாளான இன்று மட்டுமே இரு தரப்பிலும் சேர்த்து 16 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறித்தும் அவர் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, March 1, 2020, 18:49 [IST]
Other articles published on Mar 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+