Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா 8, நியூசி.8, ஆனா ஆஸி.க்கு மட்டும் 6.. ஒண்ணும் புரியல.. ஆனா உலக கோப்பைக்கு தொடர்பு இருக்கு

Recommended Video

World Cup 2019 : இந்திய அணி, இங்கிலாந்திடம் மட்டும் தோல்வியை சந்திக்கும்-பிரன்டன் மெக்கல்லம்- வீடியோ

லண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14ம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் என 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.

இந் நிலையில், உலக கோப்பையில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் குறித்து ஒரு கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த கணிப்பை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் வெளியிட்டு இருக்கிறார்.

முகநூலில் வைரல்

அந்த பட்டிலை முகநூலில் அவர் வெளியிட்டு இருக்கிறார். இணையத்தில் அவரின் இந்த பட்டியல் விவகாரம் தான் ஹைலைட். அந்த பட்டியலில் அவர் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்துக்கு வெற்றி

வலுவான அணியான இங்கிலாந்து, 9 லீக் ஆட்டங்களில் 8ல் வெற்றி பெறும். ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்று போகும். அடுத்து இந்திய அணியின் வெற்றி தோல்வி குறித்தும் அவர் கூறியிருக்கிறார். அதாவது இந்திய அணி 8 ஆட்டங்களில் வெற்றி பெறும். இங்கிலாந்திடம் மட்டும் தோல்வியை சந்திக்கும்.

ஆஸி.க்கு 6

ஆஸி.க்கு 6

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை பற்றி அவர் கூறியிருக்கும் கணிப்பு தான் சற்றே ஆச்சர்யப்பட வைக்கிறது. அதாவது அந்த அணி மொத்தமே 6 போட்டிகளில் தான் வெற்றி பெறும். மேற்கிந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்கும்.

அரையிறுதியில் யார்?

அரையிறுதியில் யார்?

உலக கோப்பையில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு நுழையும். அந்த அணிகளுக்கு இதில் எவ்வித சிக்கலும் இருக்காது.

4 அணிகள் தயார்

4 அணிகள் தயார்

அரையிறுதிக்கான மற்றொரு இடத்திற்கு 4 அணிகள் மோதும். அதாவது நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா 5 வெற்றி, 4 தோல்வியுடன் சமமாக இருக்கும். அப்போது ரன்ரேட் என்ற முக்கிய அம்சத்தின் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும்.

2ல் வெற்றி பெறும்

2ல் வெற்றி பெறும்

வங்கதேசம் (இலங்கைக்கு எதிராக), இலங்கை (மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக) அணிகளுக்கு தலா ஒரு வெற்றி மட்டும் பெறும். ஆப்கானிஸ்தான் 2 வெற்றி (இலங்கை, வங்கதேசத்துக்கு எதிராக) பெறும்.

உண்மையாகுமா?

உண்மையாகுமா?

மெக்கல்லம் கூறியிருப்பது எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. ஏன் எனில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் தான் வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார். எந்த அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார் என்று புலப்பட வில்லை. இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னரே அது உண்மையாகுமா, இல்லையா என்பது தெரியவரும்.

Story first published: Monday, June 3, 2019, 17:02 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+