For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேட்ச் முடிந்த அன்று இரவு.. பார்ட்டிக்கு அழைத்த வில்லியம்சன்?.. மறுத்த இந்திய வீரர்கள்?

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வெற்றியை நியூசிலாந்து அணி விடிய விடிய கொண்டாடி இருக்கிறது.

கிரிக்கெட் உலகில் இந்த நொடியிலும் Talk Of the Town-ஆக இருப்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். இந்தியாவை அடித்து துவைத்து காயப் போட்டிருக்கிறது நியூசிலாந்து.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் துவங்கிய இப்போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.

பவுலிங்கும் சொதப்பல்

பவுலிங்கும் சொதப்பல்

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா, ரிஷப் பண்ட் ஏகப்பட்ட சூப்பர் ஸ்டார்களை கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் எந்த நட்சத்திரமும் ஜொலிக்கவில்லை. எக்ஸ்-ஃபேக்டர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்டால் துரும்பை கூட கிள்ளி வைக்க முடியவில்லை. எனினும், பந்துவீச்சு முதல் இன்னிங்ஸில் ஓரளவு நிம்மதியை கொடுத்தது. ஆனால், 2வது இன்னிங்ஸில் அதுவும் புஸ்ஸானது.

சுக்ர திசை

சுக்ர திசை

நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களும், டாப் லெவல் கிரிக்கெட் விளையாடினார்கள் என்று சொல்ல முடியாது. கேப்டன் கேன் வில்லியம்சன் தான் இரு இன்னிங்ஸிலும் அணியின் தூணாக இருந்தார். ஒருவேளை அவர் இப்போட்டியில் ஆடாமல் இருந்திந்தால் கிளைமேக்ஸ் மாறியிருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் ராஸ் டெய்லர் நின்று அடித்தாலும், அவருக்கு சுக்ரனும் துணை இருந்ததை மறந்துவிட முடியாது.

நியூசிலாந்து பார்ட்டி

நியூசிலாந்து பார்ட்டி

பல ஆண்டுகள் கனவாக இருந்துவந்த ஐசிசி டிராபியை நியூசிலாந்து கைப்பற்றியது என்றும் அவர்கள் கிரிக்கெட் புத்தகத்தில் மறக்க முடியாத நிகழ்வாக வரிகளாக மாறிப் போனது. இந்தியாவுக்கு எதிரான இந்த வெற்றியை, சவுத்தாம்ப்டனில் விடிய விடிய கொண்டாடித் தீர்த்திருக்கிறது நியூசிலாந்து அணி. இதுகுறித்து stuff.co.nz வெளியிட்டுள்ள செய்தியில், வெற்றி கொண்டாட்டத்தை மைதானத்தோடு நிறுத்திவிடாமல், அவர்கள் தங்கியிருந்த ஹில்டன் ஹோட்டலிலும் தங்கள் அணி கொண்டாடியது குறித்து கேப்டன் வில்லியம்சன் மனம் திறந்திருப்பதாக கூறியுள்ளது.

மறுத்த பிசிசிஐ?

மறுத்த பிசிசிஐ?

அதில், "எங்களுக்கு ஒரு சிறந்த இரவாக அன்று அமைந்தது. கிரிக்கெட்டின் அருமையான தருணங்களுக்குப் பிறகு வீரர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி, வாட்லிங் இந்த இறுதிப் போட்டியோடு ஓய்வு பெற்றிருப்பதால், அவருக்கும் அது என்று நீங்கா நினைவுகளுடன் கூடிய சரியான கொண்டாட்டமாக அமைந்தது" என்றார். எனினும், இந்த பார்ட்டிக்கு இந்திய வீரர்களை, நியூசி நிர்வாகம் அழைத்ததாகவும், ஆனால் பிசிசிஐ அதற்கு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, போட்டி முடிந்து நியூசிலாந்து வீரர்கள் கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடிக் கொண்டிருந்த போதே, இந்திய வீரர்கள் தங்கள் அறைக்கு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 25, 2021, 14:05 [IST]
Other articles published on Jun 25, 2021
English summary
New Zealand ‘full-night celebrations’ after wtc final - கோலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+