Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி vs வில்லி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 'பாட்ஷா' யார்? மேட்ச்ன்னா இப்படி இருக்கணும்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியாவை காட்டிலும் நியூசிலாந்துக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

நியூசி.,க்கு அதிகம்

நியூசி.,க்கு அதிகம்

ஆனால், இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றிப் பெறவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை நாம் பார்க்கலாம். முதல் விஷயம். 'நியூசிலாந்தின் பேக் 'டூ' பேக் மேட்சஸ். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக, இதே இங்கிலாந்து ஆடுகளத்தில் நியூசிலாந்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், ஆடுகளத்தில் தன்மை, பக்குவம், தட்பவெட்ப நிலை, தகவமைப்பு என அனைத்து விஷயங்களையும், இவ்விரண்டு போட்டிகளில் நியூசிலாந்து புரிந்து வைத்து கொள்ளும். ஜூன் 14ம் தேதி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை முடிக்கும் இங்கிலாந்து அடுத்த நான்கே நாட்களில், அதாவது ஜூன் 18ல் இந்தியாவை எதிர்கொள்கிறது.

சமாளிக்குமா?

சமாளிக்குமா?

இந்தியாவோ, மும்பையில் பயோ - பபுளில் இருந்துவிட்டு, நேராக இங்கிலாந்து வந்து அங்கு 10 நாட்கள் மீண்டும் பயோ - பபுளில் இருந்துவிட்டு, அப்படியே சவுத்தாம்ப்டன் பிட்சில் காலடி எடுத்து வைக்கிறது. பெரிதாக பயிற்சி ஆட்டங்கள் என்று எதுவும் கிடையாது. 'ஓடுகின்ற காட்டாறில் தொப்புக்கடி என்று விழுந்தால் என்ன ஆகும்?'.. ஆத்தோடு அடித்துக் கொண்டு போக வேண்டியது தான். இப்போது அப்படித் தான் இருக்கிறது இந்திய அணியின் நிலைமை.

பயிற்சி போட்டிகள் இல்லாமல்

பயிற்சி போட்டிகள் இல்லாமல்

நியூசிலாந்தை போன்ற கண்டிஷனை கொண்ட இங்கிலாந்தில் விளையாடுவது மட்டுமல்லாமல், மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி ஃபுல் போர்ஸில் இருக்கும் நியூசிலாந்து அணியை, Blank-ஆக செல்லும் இந்திய அணி சமாளிக்க முடியுமா? என்பதே கேள்வி. அதுவும், இந்தியாவுக்கு நேர் மாறாக கொண்ட இங்கிலாந்து கண்டிஷனில், அதுவும் பயிற்சிப் போட்டிகளே இல்லாமல்.

செட் ஆகுமா இந்தியா?

செட் ஆகுமா இந்தியா?

குறிப்பாக, டியூக் பந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் இங்கிலாந்து பிட்ச்களில், நியூசிலாந்து பாஸ்ட் பவுலர்களின் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும். மேற்கூறிய அனைத்து அம்சங்களும், நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தானே தவிர, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கிடையாது. ஏனெனில், அதற்குள் இந்தியா ஓரளவுக்கு செட் ஆகியிருக்கும். ஸோ, WTC 2021 பைனலில் இந்தியாவுக்கு மாபெரும் சோதனை காத்திருக்கிறது என்று அடித்துக் கூறலாம்.

Story first published: Wednesday, May 19, 2021, 22:23 [IST]
Other articles published on May 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+