Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நன்றி விடைபெறுகிறேன்".. தோனியை ரன் அவுட் செய்த நியூசிலாந்து ஜாம்பவான் கப்தில் ஓய்வு அறிவிப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஜாம்பவான் வீரர் மார்ட்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார். 38 வயதான நிலையில் மார்ட்டின் கப்தில் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

தோனியின் கடைசி சர்வதேச போட்டியில் அவரை ரன் அவுட் செய்து வெளியேற்றிய மார்ட்டின் கப்திலை இந்திய ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதே சமயம், அவர் ஓய்வை அறிவித்து இருப்பது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

new zealand martin guptill dhoni

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன மார்ட்டின் கப்தில், நியூசிலாந்து அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளிலும், 122 டி20 போட்டிகளிலும், 47 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 23 சர்வதேச சதங்களை அடித்து இருக்கிறார். பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்து இருக்கிறார்.

மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டி ரன்களை குவித்த வீரர் ஆவார். அவர் 3531 டி20 ரன்கள் குவித்து இருக்கிறார். அதேபோல நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். மார்ட்டின் கப்தில் 7346 ஒருநாள் போட்டி ரன்களை அடித்து இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டி ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ராஸ் டெய்லர் மற்றும் ஸ்டீபன் பிளம்மிங் உள்ளனர். மார்ட்டின் கப்தில் 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் கால் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 237 ரன்கள் அடித்தது சாதனை செய்தார். அதுவே நியூசிலாந்து அணியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோராக இன்றளவும் உள்ளது.

மார்ட்டின் கப்தில் 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். தனது அறிமுகப் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்து இருந்தார். இந்திய ரசிகர்களால் மார்ட்டின் கப்திலை மறக்கவே முடியாது. 2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் இந்திய அணி வெற்றிக்காக போராடி வந்த கடைசி சில ஓவர்களின் போது, தோனியை தனது துல்லியமான வீச்சால் ரன் அவுட் செய்தார்.

அந்த ரன் அவுட்டால் அந்தப் போட்டியின் முடிவே மாறியது. பின்னர் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போது முதல் தோனி ரசிகர்கள் மார்ட்டின் கப்திலை சமூக வலைதளங்களில் திட்டி வருகின்றனர். அது பற்றி அவரே வேடிக்கையாக பலமுறை குறிப்பிட்டு இருக்கிறார். அவரது ஓய்வு அறிவிப்பை அடுத்து நியூசிலாந்து வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, January 8, 2025, 19:18 [IST]
Other articles published on Jan 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+