Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலிடத்தை குறிவைத்து சூப்பர் ஆட்டம் போட்ட நியூசிலாந்து... கடைசியில இப்படி ஆயிடுச்சே!

வெல்லிங்டன் : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வெற்றி கொண்டுள்ளது.

உலக டெஸ்ட் அணி பட்டியலில் முதலிடத்தை அந்த அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொற்ப புள்ளிகளில் அதை இழந்துள்ளது.

ஆனால் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவை மூன்றாவது இடத்திற்கு நியூசிலாந்து பின்தள்ளியுள்ளது.

2வது இடத்தில் நியூசிலாந்து

2வது இடத்தில் நியூசிலாந்து

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிய நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரை முழுமையாக வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் அணி பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

புள்ளிகள் வித்தியாசத்தில் 2வது இடம்

புள்ளிகள் வித்தியாசத்தில் 2வது இடம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த தொடரின் முழுமையான வெற்றி மூலம் உலக டெஸ்ட் அணி பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்து பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புள்ளிகள் அடிப்படையில் இரண்டு அணிகளும் 116ஐ பெற்றுள்ளது. ஆயினும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை விட பின்தங்கி இரண்டாவது இடத்தை நியூசிலாந்து பெற்றுள்ளது.

பின்தள்ளிய நியூசிலாந்து

பின்தள்ளிய நியூசிலாந்து

ஆஸ்திரேலியா அணி, 116.461 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள நிலையில், நியூசிலாந்து, தற்போதைய இந்த வெற்றி மூலம் 116.375 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையே பெற முடிந்துள்ளது. ஆயினும் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவை 3வது இடத்திற்கு 114 புள்ளிகளுடன் பின்தள்ளியுள்ளது.

நம்பர் 1 இடத்தை தீர்மானிக்கும்

நம்பர் 1 இடத்தை தீர்மானிக்கும்

இதனிடையே அடுத்ததாக சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் அணியுடன் நியூசிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் மோதவுள்ளது. இதேபோல ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடன் சொந்த மண்ணில் மோதவுள்ள நிலையில், இந்த இரு தொடர்களும் அடுத்ததாக யார் நம்பர் ஒன் இடத்தை பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும்.

Story first published: Monday, December 14, 2020, 11:47 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+