இவங்க தான் அந்த 15 பேரு.. சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரும் இருக்காரே.. ஆச்சர்யம் தந்த நியூசி.
வெலிங்டன்: உலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் மாற்று விக்கெட் கீப்பராக இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத டாம் பிளன்டெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை மே இறுதியில் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த முறை உலக கோப்பையை வெல்லும் அணிகளாக இந்தியாவும், இங்கிலாந்தும் உள்ளதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் கூறி உள்ளனர்.
எனினும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அண்மைக்காலமாக எழுச்சி அடைந்துள்ளது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

எடை போட முடியாது
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளையும் எளிதாக எடை போட முடியாது. ஆகையால், உலக கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவும்.

அணி குறித்து ஆலோசனை
அதற்காக 15 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்ய அனைத்து அணிகளும் ஆலோசித்து வருகின்றன. இந்திய அணி வரும் 20ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

15 பேர் அறிவிப்பு
இந்நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சம பலம் வாய்ந்த சிறந்த வீரர்களை கொண்ட அணியாக நியூசிலாந்து உள்ளது.

கேப்டன் யார்?
உலக கோப்பை அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக இருப்பார். மற்ற வீரர்கள் விவரம் வருமாறு: மார்டின் குப்தில், கோலின் முன்ரோ, ராஸ் டெய்லர், டாம் லதாம், ஹென்றி நிகோல்ஸ், கோலின் டி கிராண்ட் ஹோம், ஜேம்ஸ் நீஷம், டிரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிம் சௌதி, மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

மாற்று விக்கெட் கீப்பர்
மாற்று விக்கெட் கீப்பராக இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத டாம் பிளன்டெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக கோப்பை அணியில் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications