Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி- நியூஸி அணி அறிவிப்பு- மீண்டும் ஜிம்மி நீஷம்! #cricket

வெல்லிங்டன்: இந்திய சுற்றுப்பயணத்துக்காக 15 பேர் கொண்ட நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்த ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் இடம்பெற்றுள்ளார். அதேபோல் மார்ட்டின் கப்திலும் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு இம்மாதம் நியூசிலாந்து அணி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து போத உள்ளது.

கப்தில்

கப்தில்

தென்னாப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் மார்ட்டின் கப்தில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

ஜிம்மி நீஷம்

ஜிம்மி நீஷம்

9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஜிம்மி நீஷம். கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளின் போது காயமடைந்தார் அவர். ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜிம்மி நீஷம் இடம்பெறவில்லை. தற்போது மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

5 ஒருநாள் போட்டிகள்

5 ஒருநாள் போட்டிகள்

இந்தியா- நியூசிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் போட்டிகள் கான்பூர், கொல்கத்தா, இந்தூரில் நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

யார் யார்?

யார் யார்?

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:

கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், பிரேஸ்வெல், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், ஜிம்மி நீஷம், ஹென்றி நிக்கோல்ஸ், லூக் ரோஞ்சி, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங்.

Story first published: Tuesday, September 6, 2016, 11:08 [IST]
Other articles published on Sep 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+