Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு பெயர் டெஸ்ட் போட்டியா??.. நியூசிலாந்தை புரட்டி எடுத்த இங்கிலாந்து அணி.. முதல் நாளே சம்பவம்!

நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி காட்டிய Bazball அணுகுமுறையால் கிரிக்கெட் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். என்ன நடக்கிறது என்றே புரியாமல் நியூசிலாந்து பவுலர்கள் குழம்பிய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. ஆனால் அவர்களின் இந்த முடிவு விணையை ஏற்படுத்தும் என அப்போது ரசிகர்களுக்கு புரியவில்லை.

ஷாக் தந்த இங்கிலாந்து

ஷாக் தந்த இங்கிலாந்து

முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட தொடங்கியது. எந்தவொரு ஓவரிலும் அடங்க மாட்டோம் என தொடக்க வீரர்களே நாலாபுறமும் பந்தை சிதறடித்தனர். அந்தவகையில் ஓப்பனிங் வீரர் டக்கெட் 68 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 84 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் ஒல்லி போப் 65 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

ஹாரி புரூக் துவம்சம்

ஹாரி புரூக் துவம்சம்

இவர்களின் ரன் வேட்டையால் இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலெல்லாம் 100 ரன்களை கடந்துவிட்டது. டாப் ஆர்டர் விக்கெட்கள் சரிந்த பிறகாவது ரன் வேகம் குறையும் என எதிர்பார்த்தால் அதற்கும் ஆப்பு வைத்தார் ஹாரி புரூக். "எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா" என்பது போல பவுண்டரிகளுக்கு பந்தை அனுப்பிக்கொண்டே இருந்தார். 81 பந்துகளை சந்தித்த புரூக் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 89 ரன்களை அடித்து துவம்சம் செய்தார்.

பிரமாண்ட ஸ்கோர்

பிரமாண்ட ஸ்கோர்

இதனால் இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்களை அடித்து டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணி சமீப காலமாக Bazball என்ற புதிய முறையை கையாண்டு வருகிறது. அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மெக்கலமும் - ஸ்டோக்ஸும் இணைந்து அதிரடியை மட்டுமே நம்பி இருக்கும் முறை இது. இதனால் பல சமயங்களில் வெற்றி கிடைத்துள்ளதால் தொடர்ந்து செய்கின்றனர்.

அடிவாங்கும் நியூசிலாந்து

அடிவாங்கும் நியூசிலாந்து

இங்கிலாந்தின் தாண்டவத்திற்கு பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடுகிறோம் என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்துள்ளனர். 18 ஓவர்களில் 37 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 3 விக்கெட்களை இழந்துவிட்டது. ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்றே ஒரு அணி 329 ரன்களை குவித்துவிட்டது, மற்றொரு அணி 3 விக்கெட்களை இழந்துவிட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகை கெடுக்கிறது என வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, February 16, 2023, 14:40 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+