For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுமார் மூஞ்சி குமாரு டீம்னு நம்பி ஏமாந்துடாதீங்க.. இந்தியாவுக்கு ஆப்பு வைக்கப் போறதே அவங்க தான்!

Recommended Video

ஹாட்ரிக்கை விட பெரிய சாதனை.. மலிங்காவை கண்டு மிரண்ட ரசிகர்கள்!

மும்பை : ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பலமான இந்திய அணியை வீழ்த்தும் அனைத்து தகுதியும் கொண்ட அணி நியூசிலாந்து தான்.

சமீபத்தில் நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது.

பலம் குறைந்த இலங்கை அணியிடமே தடுமாறிய அந்த "சுமார் மூஞ்சி குமாரு" நியூசிலாந்து அணியா இந்தியாவுக்கு சவாலாக இருக்கப் போகிறது?

சிறப்பாக ஆடி வருகிறது

சிறப்பாக ஆடி வருகிறது

ஆம், இலங்கை தொடருக்கு கொஞ்சம் பின்னே பார்த்தால் அது உண்மை என்பது புரியும். சொல்லப் போனால் இந்தியாவை விட டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து சிறப்பாக ஆடி வருகிறது. இந்தியாவை விட அதிக வெற்றி சதவீதத்தை வைத்து இருக்கிறது நியூசிலாந்து.

சாம்பியன்ஷிப் புள்ளிகள்

சாம்பியன்ஷிப் புள்ளிகள்

இனி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற மித்தல் ஒன்பது அணிகள் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலானவை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக கருதப்படும். ஒவ்வொரு போட்டியின் வெற்றி, தோல்வி, டிரா அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா முதல் இடம்

இந்தியா முதல் இடம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 120 புள்ளிகள் பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து

இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான தொடரை 1 - 1 என சமன் செய்த நியூசிலாந்து 60 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெஸ்ட் அணிகள் தரவரிசைப் பட்டியலிலும் இந்தியா முதல் இடத்திலும், நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

இந்தியாவை முந்தும்

இந்தியாவை முந்தும்

தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை விட பின் தங்கி இருந்தாலும், அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து புள்ளிகளை அள்ளி இந்தியாவை பின் தள்ளும் என சில கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சுதாரித்த நியூசிலாந்து

சுதாரித்த நியூசிலாந்து

அதற்கான காரணம் இது தான். கடந்த அக்டோபர் 2016இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 0 - 3 என மிக மோசமாக தோல்வி அடைந்தது. எனினும், அதன் பின் அந்த அணி சுதாரித்தது. வெற்றிகளாக குவித்து வருகிறது.

அதிக வெற்றி சதவீதம்

அதிக வெற்றி சதவீதம்

இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்த பின், நியூசிலாந்து இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளது. அதில் 13 வெற்றிகள், 4 டிரா, 3 தோல்விகள் பெற்றுள்ளது. இதே காலத்தில் மற்ற அணிகளை காட்டிலும் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ளது நியூசிலாந்து.

தோல்விக்கு காரணம் என்ன?

தோல்விக்கு காரணம் என்ன?

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து தோற்க காரணம், அந்த அணி இலங்கை சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். மேலும், அந்தப் போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதை நம்பிடாதீங்க

அதை நம்பிடாதீங்க

அந்த ஒரு போட்டி தோல்வியை நம்பி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது என்பதை நம்பி, நியூசிலாந்து அணியை சுமார் மூஞ்சி குமாராக எடை போட்டு விடக் கூடாது.

வெற்றி முக்கியம்

வெற்றி முக்கியம்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது இந்தியா. அப்போது இந்தியா தொடரைக் கைப்பற்றி, நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும்.

Story first published: Sunday, September 8, 2019, 18:28 [IST]
Other articles published on Sep 8, 2019
English summary
New Zealand poses threat to India in ICC World test championship
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+