Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா இவரு? அறிமுக போட்டியிலேயே இப்படி ஆடுறதா? இந்தியாவுக்கு எதிரான நியூ, ப்ளான் சக்ஸஸ்!

லார்ட்ஸ்: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நியூசிலாந்து வீரர் டேவன் கான்வாய் மரண காட்டு காட்டியுள்ளது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஆகியுள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

நியூசிலாந்து அணியின் இந்த போட்டியை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய அணி உற்று நோக்கி வருகிறது.

தொடக்கமே சறுக்கல்

தொடக்கமே சறுக்கல்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கம் சற்று சரிவாக இருந்தது. டாப் ஆர்டரில் இருக்கும் அனுபவ வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். டாம் லாத்தம் 23 ரன்களுக்கும், கேன் வில்லியம்சன் 13 ரன்களுக்கும், ராஸ் டெய்லர் 14 ரன்களுக்கும் வெளியேறினர்.

இளம் வீரர்

இளம் வீரர்

ஆனால் மறுமுனையில் ஆடி வந்த இளம் வீரர் டேவன் கான்வே யாரும் எதிர்பார்க்காத வகையில் அசத்தலாக விளையாடினார். கான்வாய்க்கு இது தான் முதல் சர்வதேச போட்டியாகும். இந்நிலையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசியுள்ளார். தற்போது வரை அவர் ஆட்டமிழக்காமல் 129 ரன்களை விளாசியுள்ளார். இதில் 15 அரைசதங்கள் அடங்கும்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயல்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் நடக்கிறது. கடைசியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தான் சதமடித்திருந்தார்.

உற்றுநோக்கும் இந்திய அணி

உற்றுநோக்கும் இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் விதத்தில் தான் இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் அறிமுக வீரர் டேவன் கான்வே சதமடித்து அசத்தியது இந்திய அணிக்கு அச்சுறுத்தலை கிளப்பியுள்ளது. இங்கிலாந்து போன்ற கடினமான பிட்ச்-ல் அறிமுக போட்டியில் சதமடித்திருக்கும் டேவன் கான்வேவை சமாளிப்பது இந்தியாவுக்கு கடினமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Wednesday, June 2, 2021, 23:03 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+