Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சவுத்தியின் மண்டைக்குள் குடைச்சல்.. இறுதிப்போட்டியில் கவனிக்கப்படாத விஷயம்..இளம் வீரரால் வந்த அச்சம்

நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரிஷப் பண்ட் தனது மண்டைக்குள் எவ்வளவு குடைச்சல் கொடுத்தார் என்பது குறித்து நியூசிலாந்து வீரர் சவுத்தி தெரிவித்துள்ளர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை வென்றது.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி, ரிசர்வ் டே ஆட்டத்தின் போது சொதப்பியது.

6வது நாள் ஆட்டம்

6வது நாள் ஆட்டம்

ரிசர்வ் டே ஆட்டத்தில் தனது 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும், ரிஷப் பண்ட் மட்டுமே பெரும் அளவில் போராடினார். அதிரடி ஆட்டக்காரரான அவர், இறுதி நாளில் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைக்கக்கூடியவர். அந்தவகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது பேட்டை அடிக்கடி சுழற்றினார். ஆனால் சரியான டைமிங் இல்லாததால் 41 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

மிஸ்ஸாக கேட்ச்

மிஸ்ஸாக கேட்ச்

ரிஷப் பண்ட் முன்கூட்டியே அவுட்டாகி இருக்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது ரிஷப் பண்ட் அடித்த பந்தை டிம் சவுத்தி பிடிக்க தவறவிட்டார். இதனால் 2வது வாய்ப்பு பெற்ற பண்ட் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

செய்த தவறு

செய்த தவறு

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சவுத்தி, பண்ட்-ன் கேட்ச்சை விட்டதை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையே விட்டது போல எண்ணினேன். ஏனென்றால் பண்ட், 5 அல்லது 6 ஓவர்களுக்குள் ஆட்டத்தை எப்படி வேண்டுமானலும் எடுத்துச் செல்லக்கூடியவர். ஏற்கனவே நாங்கள் மிகுந்த அழுத்தத்திற்கு இடையே ஆடியதால், பண்ட்-ன் கேட்ச்சை விட்டது என் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

நிம்மதி

நிம்மதி

கேட்ச்சை தவறவிடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் மோசமான உணர்வை தரும். அது மிகவும் வருத்தம் அளிக்கும். தான் விட்ட கேட்ச்சால் அணியை தோல்விக்கு அழைத்து சென்றுவிட்டோம் என்று தோன்றும். ஆனால் பண்ட் அவுட்டான பிறகு தான் எனக்கு நிம்மதியாகவே இருந்தது.

Story first published: Thursday, July 1, 2021, 18:57 [IST]
Other articles published on Jul 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+