Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியால் ஈஸியா ரன் அடிக்க முடியாது.. வம்பிழுத்த நியூசி கேப்டன்.. பெரிய ஓட்டை வேற இருக்காம்

ஐதராபாத் : இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் விளையாடுவது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் முதல் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தற்காலிக கேப்டன் டாம் லாத்தம், அணியில் முக்கிய வீரர்கள் இல்லாதது பெரும் ஓட்டையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

இதேபோன்று ட்ரெண்ட் பவுல்ட் தற்போது துபாயில் நடைபெற்ற வரும் டி20 தொடரில் விளையாடி வருகிறார். இதேபோன்று புதிய கேப்டன் டிம் சவுதி பாகிஸ்தான் தொடர் முடிந்த பிறகு நியூசிலாந்து புறப்பட்ட சென்றார். இந்த நிலையில் இந்திய தொடரை சந்திக்கும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாத்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் இல்லாதது பெரும் பின்னடைவு தான்.

சோதி காயம்

சோதி காயம்

ஆனால் கூடுதலாக அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் உடையவர்கள் .தற்போது அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நேரம் வந்துவிட்டது. எங்கள் அணியில் லோக்கி பெகுர்சன் இருப்பது அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அவர் இந்தியாவில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் சோதி காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்.

மாற்றிக் கொள்வோம்

மாற்றிக் கொள்வோம்

மற்ற இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என நான் நம்புகிறேன்.பாகிஸ்தானில் நாங்கள் விளையாடிய ஆட்டம் நிச்சயம் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும் இந்த நிலையில் இந்த தொடர் எங்களுக்கு பெரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று நாங்கள் அதற்கு தகுந்தால் போல் மாற்றிக் கொள்வோம்.

கடினமான சூழல்

கடினமான சூழல்

பாகிஸ்தான் ஆடுகளங்களை விட இந்தியாவின் ஆடுகளங்கள் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். உலகக்கோப்பை முன் நடைபெறும் இந்த தொடரில் நாங்கள் விளையாடுவதால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். விராட் கோலி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை எப்படி கையாள்வது என்பது குறித்து நாங்கள் திட்டம் தீட்டி வைத்திருக்கிறோம். விராட் கோலி ரன் சேர்க்க கடினமான சூழலை ஏற்படுத்துவோம் என்று டாம் லாத்தம் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 17, 2023, 23:15 [IST]
Other articles published on Jan 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+