
நியூசி, அணி
லேட்டாக வந்தாலும் எந்தவித லேட்டஸ்ட்-ம் பெரிதாக இன்றி நியூசிலாந்து விளையாடுகிறது. அதாவது கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. எனவே கடந்தாண்டு இருந்த அதே அணியுடன் நியூசிலாந்து களமிறங்கியுள்ளது. ஃபின் ஆலன் மற்றும் மைக்கேல் ப்ரேஸ்வெல் ஆகிய இரண்டு இளம் வீரர்கள் மட்டுமே அந்த அணியில் புதிய இணைப்பாக உள்ளனர்.

பேட்டிங் வரிசை
நியூசிலாந்தின் சீனியர் வீரரான மார்டின் கப்தில் தனது 7வது டி20 உலகக்கோப்பையில் விளையாடவிருக்கிறார். மற்றபடி பேட்டிங்கில் வில்லியம்சன், டெவோன் கான்வே, ஆடம் மில்னே, ஃபின் ஆலன், மைக்கேல் ப்ரேஸ்வெல், மார்க் சாப்மென், டேரில் மிட்செல் என சிறப்பான வரிசை உள்ளது. குறிப்பாக இந்த முறையும் நிறைய இடதுகை வீரர்கள் உள்ளனர்.

பந்துவீச்சு படை
பந்துவீச்சை பொறுத்தவரையில் ட்ரெண்ட் போல்ட், ஜிம்மி நீஷம், டிம் சௌதி, லாக்கி ஃபெர்க்யூசன், ஆடம் மில்னே என வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. சுழற்பந்துவீச்சில் இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் முக்கியமான வீரர்களாக உள்ளனர். இவர்களை தவிர்த்து மேலும் சில பார்ட் டைம் ஸ்பின்னர்களும் உள்ளனர்.

அதே அணி
கடந்தாண்டு தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று இருந்த சூழலில் இதே நியூசிலாந்து அணி தான் தடை கல்லாய் இருந்தது. அப்போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 110 ரன்களை மட்டுமே அடிக்க, நியூசிலாந்து 14.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது. எனவே இந்த முறையும் இந்தியாவுக்கு பெரும் சவாலாக நியூசிலாந்து இருக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











