Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழை மட்டும் வரலனா, இந்தியாவை நசுக்கி இருப்போம்.. ஆட்டமே மாறி இருக்கும்.. கேப்டன் டிம் சவுதி வேதனை

நேப்பியர் : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் இந்திய அணி ஒன்பது ஓவர் முடிவில் 75 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

ஏமாற்றத்தை கொடுத்தது

ஏமாற்றத்தை கொடுத்தது

அப்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 75 ரன்கள் எடுத்திருந்தால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த போட்டி குறித்து பேசிய தற்காலிக கேப்டன் டிம் சவுதி இன்றைய ஆட்டம் எங்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தது. நாங்கள் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை.

சிறப்பாக பந்துவீசினோம்

சிறப்பாக பந்துவீசினோம்

நாங்கள் களத்தில் என்ன செய்ய வேண்டும். எப்படி மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முன்பே பேசி இருந்தோம். இன்றைய ஆட்டத்தில் கூட இந்தியாவில் விக்கெட்களை நாங்கள் தொடக்கத்தில் அடுத்தடுத்து எடுத்தோம். எங்களுக்கு தெரியும் இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுத்தால் போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் துரதிஷ்டவசமாக வானிலை எங்களுக்கு எதிராக குறுக்கே வந்து விட்டது.

முடிவு மாறி இருக்கும்

முடிவு மாறி இருக்கும்

20 ஓவரும் நடந்திருந்தால் மட்டுமே போட்டி எப்படி முடிந்திருக்கும் என்று தெரியும். இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்தது. மழை மட்டும் வராமல் இருந்திருந்தால், இந்த ஆட்டம் நிச்சயம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆனால் முழு ஓவரையும் வீச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.எங்களுக்கு மழை குறுக்கிட்ட போது எது டக்வொர்த் ஸ்கோர் என்று தெரியவில்லை. இதனால் போட்டி சமனில் முடிந்ததா என்பது குறித்தும் கூட எங்களுக்கு தெரியாது.

நெருக்கடி கொடுத்தோம்

நெருக்கடி கொடுத்தோம்

நிச்சயம் ஒரு ரன் கூடுதலாகவோ, இல்லை குறைவாகவோ எடுத்திருந்தால் ஆட்டம் முடிவே மாறி இருக்கும். நாங்கள் இன்று பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டும் என நினைக்கிறேன். இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்ததை பார்க்கும் போதே மனது சந்தோஷமாக இருந்தது. இந்திய அணியை ஒருநாள் தொடரில் சந்திப்பதும் மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா பலமான அணியாக விளங்குகிறது. இந்தியா போன்ற அணியுடன் விளையாடும்போது ரசிகர்களுக்கு அது நல்ல போட்டியை காண வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன் என்று சவுதி கூறினார்.

Story first published: Tuesday, November 22, 2022, 19:02 [IST]
Other articles published on Nov 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+