Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பைக்கான நியூசிலாந்து அணி.. கேன் வில்லியம்சனின் மாஸ் கம்பேக்.. குடும்பத்தினர் மூலம் சர்ப்ரைஸ்!

மும்பை: நியூசிலாந்து குடும்ப உறுப்பினர்களை கொண்டு உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள க்யூட் வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

New Zealand team announced by the Family Members of New Zealand players for the world cup 2023

அதில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்ட முறை தான் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொண்டு நியூசிலாந்து வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர்களின் மனைவி, குழந்தைகள், தாய் உள்ளிட்டோர் தங்கள் வீரரின் பெயரை சொல்லுகின்றனர். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த முறை பவுண்டரி கணக்கில் உலகக்கோப்பை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, இம்முறை இந்தியாவில் வெல்ல தயாராகியுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் தொடரின் போது காயத்தால் நடக்க கூட முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் விமானம் ஏறிய கேன் வில்லியம்சன் கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் டாம் லேதம் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் நியூசிலாந்து தேசிய அணியுடனான ஒப்பந்தமே தேவையில்லை என்று வெளியேறிய போல்ட் அண்மையில் அணிக்கு திரும்பினார். அவரும் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் தொடக்க வீரர் டெவோன் கான்வே, ஆல்ரவுண்டர்கள் ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, மேட் ஹென்றி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல் டி20 உலகக்கோப்பையில் அசத்திய கிளென் பிலிப்ஸ் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மார்க் சேப்மேன், வில் யங், அனுபவ வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி, லாக்கி ஃபெர்குசன் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பதால், 3 ஸ்பின்னர்களுடன் நியூசிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Story first published: Monday, September 11, 2023, 11:55 [IST]
Other articles published on Sep 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+