Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த நியூசிலாந்து.. 11 வருட காத்திருப்பு முடிவு..சொந்த மண்ணில் படுமோசமான தோல்வி

சிட்னி: நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணிலேயே மோசமான தோல்வியை பெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அட்டகாசம் செய்தது.

கடின இலக்கு

கடின இலக்கு

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் முதல் பந்தில் இருந்தே வானவேடிக்கை காட்டினர். அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களை அடித்தார். மற்றொரு ஓப்பனரான டெவோன் கான்வே 58 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 92 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த வீரர்களும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலியா சொதப்பல்

ஆஸ்திரேலியா சொதப்பல்

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர்கள் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கும், ஆரோன் ஃபிஞ்ச் 13 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். மிடில் ஆர்டராவது காப்பாற்றுமா என்று எதிர்பார்த்த நிலையில் மிட்செல் சாண்ட்னரின் பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மிட்செல் மார்ஷ் (16), மேக்ஸ்வெல் (28), ஸ்டோய்னிஸ் (7), டிம் டேவிட் (11) என திணறினர்.

 பழிதீர்த்த நியூசி

பழிதீர்த்த நியூசி

ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட நிலைத்து நின்று ஆடாததால் 17. 1 ஓவர்களில் அந்த அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து தோற்றிருந்தது. அதற்கு இந்தாண்டு முதல் போட்டியிலேயே நியூசிலாந்து பழிதீர்த்துள்ளது.

நியூசிலாந்து சாதனை

நியூசிலாந்து சாதனை

நியூசிலாந்து அணிக்கு இது ஒரு வரலாற்று வெற்றியும் ஆகும். ஏனென்றால் கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு டி20 போட்டியில் கூட நியூசிலாந்து வெற்றி பெற்றதே கிடையாது. எனவே இன்றைய போட்டியின் மூலம் ஆஸ்திரேலியாவின் 11 ஆண்டு சாதனைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

Story first published: Saturday, October 22, 2022, 16:53 [IST]
Other articles published on Oct 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+