For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா அடி..19 பந்தில் அரைசதம்.. 250 ஸ்ட்ரைக் ரேட் வைத்த நியூசி.வீரர்.. தனி ஆளாக போராடிய ஷகிபுல் ஹசன்

கிறிஸ்ட்சர்ச் : டி20 முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை நியூசிலாந்து அணி புரட்டி போட்டது.

டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்தவீசியது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இடம்பெறவில்லை.

அவருக்கு பதிலாக டிம் சௌதி கேப்டன் பதவியை ஏற்று விளையாடினார். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் சிஎஸ்கே வீரர் கான்வே களமிறங்கினர்.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியை காட்டிய ஃபின் ஆலன், இன்று வங்கதேச பந்துவீச்சையும் சிதற அடித்தார். 2 சிக்சர், 3 பவுண்டரிகளை விரட்டிய அவர், 19 பந்தில் 32 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான சிஎஸ்கேவின் கான்வேவும் அபாரமாக விளையாடி ரன் குவித்தார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 64 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

தொடக்க வீரர் குப்தில், இன்று வில்லியம்சன் இடத்தில் களமிறங்கினார். 27 பந்தில் 34 ரன்கள் அவர் சேர்க்க, பின்னர் களமிறங்கிய கிளன் பிலிப்ஸ், ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். 19 பந்தில் அரைசதம் கடந்த அவர், 24 பந்தில் 64 ரன்களை விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் நியூசிலாந்து அணி 208 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தது.

தடுமாறிய வங்கதேசம்

தடுமாறிய வங்கதேசம்

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நஜிமுல் 11 ரன்களும், லிட்டன் தாஸ், சௌமியா சர்கார் தலா 23 ரன்களும், சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் ஷகிபுல் ஹசன் தனி ஆளாக நின்று போராடினார்.

ஷகிபுல் ஹசன் போராட்டம்

ஷகிபுல் ஹசன் போராட்டம்

33 பந்துகளில் ஷகிபுல் ஹசன் அரைசதம் கடந்தார். மறற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் தனி ஆளாக போராடிய ஷகிபுல் ஹசன் 44 பந்தில் 70 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். நியூசிலாந்து வீரா ஆடம் மிலின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.

Story first published: Wednesday, October 12, 2022, 18:31 [IST]
Other articles published on Oct 12, 2022
English summary
New Zealand trashed Bangladesh by 48 runs and qualified for final என்னா அடி..19 பந்தில் அரைசதம்.. 250 ஸ்ட்ரைக் ரேட் வைத்த நியூசி.வீரர்.. தனி ஆளாக போராடிய ஷகிபுல் ஹசன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+