Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை.. நியூசிலாந்தை அழ வைத்த Mumbai indians வீரர்.. ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

NZ vs AUS : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

வெல்லிங்டன் நகரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் நியூஸிலாந்து வீரர் பின் ஆலன் 32 ரன்களும் சிஎஸ்கே வீரர் கான்வே 63 ரன்களும் ரச்சின் ரவீந்திர 35 பந்துகளில் 68 ரன்களும் எடுக்க நியூசிலாந்த அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.

New zealand vs australia - thrill victory for aussies as tim david hit boundary in last ball

இதனை அடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 24 ரன்களில் வெளியேறினார். இதே போன்று டேவிட் வார்னர் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதேபோன்று மேக்ஸ்வெல்லும் தன்னுடைய வழக்கமான அதிரடியை காட்டி இரண்டு சிக்சர் இரண்டு பவுண்டரி என 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 111 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. அப்போது ஜோடி சேர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட் மற்றும் ஆல் ரவுண்டர் மிச்செல் மார்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு கட்டத்தில் மிட்செல் மார்ஸ் தன்னுடைய பழைய அதிரடியை காட்டினார். ஏழு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரி என 44 பந்துகளில் அவர் 72 ரன்கள் எடுத்தார். இதேபோன்று டிம் டேவிட் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 பந்துகளில் அவர் மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரிகள் என 31 ரன்கள் சேர்த்திருதார். கடைசி மூன்று பந்தில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் அடிக்கவேண்டும் என இக்கட்டான நிலையில் இருந்தது.

அப்போது டீம் டேவிட் இருபதாவது ஓவரின் நான்காவது பந்தில் ஒரு சிக்ஸரும் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க கடைசி பந்தில் நான்கு ரன்கள் வெற்றிக்கு தேவை இருந்தது. அப்போது டிம் டேவிட் அபாரமாக ஒரு பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Story first published: Wednesday, February 21, 2024, 18:28 [IST]
Other articles published on Feb 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+