For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டியின் இடையே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் நியூசிலாந்து கேப்டன்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து - வங்கதேசம் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையே நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்று நாட்களுக்குள் வெற்றி பெற முயன்று வருகிறது.

மொகாலியில் இந்தியா தோற்க இது தான் காரணமா...? கோலி அலர்ட் மொகாலியில் இந்தியா தோற்க இது தான் காரணமா...? கோலி அலர்ட்

காயம்

காயம்

இந்நிலையில், முதல் இன்னிங்க்ஸில் வங்கதேசம் பேட்டிங் செய்த போது, வில்லியம்சன் டைவ் அடித்து பீல்டிங் செய்தார். அப்போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனினும், நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது அவர் களத்திற்கு வந்தார்.

மருத்துவ உதவி

மருத்துவ உதவி

ஆனால், பேட்டிங்கின் இடையே இரு முறை அவருக்கு வலி ஏற்பட்டு தற்காலிக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. வலி தொடர்ந்து நீடித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அரைசதம்

அரைசதம்

இந்த போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால், வலியுடன் பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து, 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இது அவரது 30 டெஸ்ட் அரைசதம் ஆகும்.

ராஸ் டெய்லர் 200

ராஸ் டெய்லர் 200

வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸில் 211 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 432 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. வில்லியம்சன் 74, ராஸ் டெய்லர் 200, ஹென்றி நிக்கோல்ஸ் 107 ரன்கள் குவித்தனர்.

கடைசி நாள் பரபரப்பு

கடைசி நாள் பரபரப்பு

நான்காம் நாள் முடிவில் வங்கதேசம் 80 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்துள்ளது. வங்கதேசம் 141 ரன்கள் பின் தங்கி உள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், வங்கதேசம் டிரா செய்யுமா? அல்லது நியூசிலாந்து வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, March 11, 2019, 11:30 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
New Zealand vs Bangladesh second test : Kane Wiliamson taken to hospital, as a precautionary mesaure.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X