Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் பயப்படாதீங்க, தைரியமா இருங்க.. இந்திய அணிக்கு ஆறுதல் கூறிய ஜடேஜா!

வெல்லிங்டன்: 3 ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்து நம்மை நசுக்கி விட்டது நியூசிலாந்து. இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை.. இருந்தாலும் இருக்கிற கடைசி ஒரு நாள் போட்டியிலாவது வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா உள்ளது. அதையே ரவீந்திர ஜடேஜாவின் வார்த்தைகளும் பிரதிபலிக்கிறது.

யாரும் பயப்பட வேண்டாம், பீதி அடைய வேண்டாம்.. என்று ஏதோ சுனாமியைப் பார்த்து அத்தனை பேரும் பயந்து அலறிக் கொண்டிருப்பதைப் போல ஆறுதல் கூறியுள்ளார் ஜடேஜா.

தோல்வின்னா வருத்தப்படுவதும், வெற்றின்னா வான வேடிக்கை விடுவதும் சகஜம்தானேப்பா.. என்ற ரீதியில் உள்ளது ஜடேஜாவின் பேச்சு.

ஐந்து போட்டிகள்.. மூன்றில் அவுட்

ஐந்து போட்டிகள்.. மூன்றில் அவுட்

நியூசிலாந்து போயுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை சந்தித்தது. இதில் 3 போட்டிகளில் தோற்று தொடரை இழந்து விட்டோம். ஒரு போட்டி டை ஆனது. அடுத்து 5வது போட்டி வருகிறது.

பீதி அடையாதீங்கப்பா

பீதி அடையாதீங்கப்பா

இந்த நிலையில் 5வது மற்றும் கடைசிப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த ஜடேஜா, யாரும் பீதி அடையத் தேவையில்லை. சின்னத் தவறுகளைக் குறைத்துக் கொண்டாலே போதும், கடைசிப் போட்டியில் வெல்ல முடியும். அந்தத் தவறுகள்தான் நம்மை பாதித்து விட்டன.

சும்மா சின்ன தப்புதான். சரி பண்ணிடலாம்

சும்மா சின்ன தப்புதான். சரி பண்ணிடலாம்

நாம் செய்தவையெல்லாம் சின்னத் தவறுகள்தான். சரி செய்து விடக் கூடியவைதான். செய்த தவறுகளின் சதவீதத்தைக் குறைத்தாலே நாம் ஜெயித்து விடலா3ம்.

பெருஸ்ஸா ஏதும் அகாது

பெருஸ்ஸா ஏதும் அகாது

இனிமேல் பெரிய பிரச்சினை எதுவும் வராது என்றே நான் கருதுகிறேன். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் நாம் ஏன் சரியாக செய்யவில்லைஎன்று நான் யோசித்துப் பார்க்கிறேன்.

பீதி அடையாம சூதானமா விளையாட வேண்டும்

பீதி அடையாம சூதானமா விளையாட வேண்டும்

யாரும் பீதி அடையாமல், பதட்டப்படாமல் விளையாடினால் சாதகமான முடிவை எட்டலாம் என்றார் ஜடேஜா.

இன்று 5வது போட்டி

இன்று 5வது போட்டி

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெறவுள்ளது.

Story first published: Friday, January 31, 2014, 18:32 [IST]
Other articles published on Jan 31, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+