Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs PAK : டி20 வரலாற்றிலேயே மாபெரும் சிக்ஸர் சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்.. பாகிஸ்தான் தோல்வி

டுனெடின் : நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் ஆடிய அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்து போனது பாகிஸ்தான் அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையை சமன் செய்தார் ஃபின் ஆலன்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது போட்டி நியூசிலாந்தின் யுனிவெர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, இந்தப் போட்டியில் வென்று ஆறுதல் அடைய திட்டமிட்டது. ஆனால், அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்தார் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ஃபின் ஆலன்.

New Zealand vs Pakistan : Finn Allen equals most six record in T20I

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரர் கான்வே 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிம் செய்ஃபர்ட் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதனிடையே ஃபின் ஆலன் அதிரடி பேட்டிங் செய்து வந்தார். ஹாரிஸ் ரௌப் வீசிய ஒரு ஓவரில் 28 ரன்கள் குவித்து வியப்பை ஏற்படுத்தினார்.

17.2 ஓவரில் 62 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் ஆலன். டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மேலும், 16 சிக்ஸ், 5 ஃபோர் அடித்து இருந்தார் ஆலன். தனது ஸ்கோரில் 85 சதவீதத்தை பவுண்டரிகள் மூலமே அவர் எடுத்து இருந்தார்.

ஃபின் ஆலன் 16 சிக்ஸ் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற ஆப்கானிஸ்தான் அணியின் ஹஸ்ரத்துல்லா ஜஜாய்-யின் சாதனையை சமன் செய்தார். 2019இல் அயர்லாந்து அணிக்கு எதிராக ஜஜாய் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். அந்தப் போட்டியில் அவர் 16 சிக்ஸ் அடித்ததை போல, தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக 16 சிக்ஸ் அடித்து சாதனையை சமன் செய்தார் ஃபின் ஆலன்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Wednesday, January 17, 2024, 11:20 [IST]
Other articles published on Jan 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+