Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி எல்லாம் நடக்குமா? வித்தியாசமான காரணத்திற்காக நிறுத்தப்பட்ட டி 20 போட்டி.. பரபர சம்பவம்!

நேப்பியர்: நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி இன்று வித்தியாசமான காரணம் ஒன்றுக்காக நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்பட்டது.

கொரோனா காரணமாக உலகம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் தொடர்கள் தீவிரமாக தொடங்கி நடந்து வருகிறது.

ஒரு பக்கம் இந்தியா ஆஸ்திரேலியா இடையில் தீவிரமாக கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடரும் நடந்து வருகிறது

டி 20 போட்டி

டி 20 போட்டி

இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையில் டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது டி 20 போட்டிகளில் நியூசிலாந்து வென்று இருந்த நிலையில் இன்று மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. இன்று போட்டி நடப்பதற்காக நேப்பியர் மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

பாதி போட்டி

பாதி போட்டி

இந்த நிலையில் இந்த டி 20 போட்டி, பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் சூரிய ஒளி. ஆம் கூடுதல் சூரிய ஒளி காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது சூரிய ஒளி சுட்டு எரித்தது.

வெளிச்சம்

வெளிச்சம்

அதேபோல் வெளிச்சமும் மிக அதிகமாக இருந்தது. இதனால் அங்கு பேட்டிங் செய்த வீரர்கள் பந்தை பார்க்க முடியாமல் திணறினார்கள். அதேபோல் பீல்டர்களும் பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். இதனால் மைதானத்தில் இரண்டு அணி வீரர்களும் திணறினார்கள்.

பவுலர்கள்

பவுலர்கள்

பவுலர்களும் சரியாக பிட்சை கணிக்க முடியவில்லை. ஏன் நடுவர்களும் கூட கண் கூசியதால் கஷ்டப்பட்டனர். இதையடுத்து அதிக சூரிய ஒளி காரணமாக 11.4 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. பின் சூரியன் மறைந்த பின் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

பொதுவாக மழை காரணமாக போட்டி தடைபடும். ஆனால் நியூசிலாந்து நேப்பியர் மைதானத்தில் மட்டுமே வெயில் காரணமாக போட்டிகள் தடைபடுகிறது. கடந்த வருடமும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி வெயில் காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 22, 2020, 17:38 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+