For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 வரலாற்றிலேயே பிரம்மாண்ட உலக சாதனை.. புதிய ரெக்கார்டு படைத்த நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி

ஆக்லாந்து : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுத்தி டி20 கிரிக்கெட் வரலாற்றில் பிரம்மாண்ட சாதனை படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டிம் சவுத்தி அதில் மேலும் ஒரு மைல்கல் சாதனை படைத்தார்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 226 ரன்கள் குவித்தது. அடுத்து பாகிஸ்தான் அணி சேஸிங் செய்த போது நியூசிலாந்து அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுத்தி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

New Zealand vs Pakistan : Tim Southee become first player to get 150 T20I wickets

அதன் மூலம் டிம் சவுத்தி சர்வதேச டி20 போட்டிகளில் முதல் வீரராக 150 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார். அவர் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் மொத்தமாக 151 விக்கெட்களை சாய்த்து இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்கது.

டிம் சவுத்தி 115 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 151 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்களை முதல் பத்து இடங்களில் காணவில்லை. யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்கள் வீழ்த்தி 13வது இடத்திலும், புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்கள் வீழ்த்தி 18வது இடத்திலும் உள்ளனர். அவர்கள் இருவருமே தற்போது இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 226 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Friday, January 12, 2024, 20:00 [IST]
Other articles published on Jan 12, 2024
English summary
New Zealand vs Pakistan : Tim Southee become first player to get 150 T20I wickets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+