For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

NZ vs PAK : பாகிஸ்தான் வீரருக்கு பிக் ஷோ மியூசிக்.. வெடித்த சர்ச்சை.. உருவ கேலி செய்த நியூசிலாந்து

டுனெடின் : நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆசாம் கான் பேட்டிங் செய்ய வந்த போது அவரை கேலி செய்யும் விதமாக பாடல் ஒளிபரப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கே டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் ஆடியது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆசாம் கான் குறித்து இந்த தொடரில் அதிகம் பேசப்பட்டு வந்தது. அவர் அதிரடி ஆட்டம் ஆடுவது ஒருபுறம் என்றால், அவர் பருமனான உடலுடன் உத்வேகத்துடன் கிரிக்கெட் ஆடி வருவது பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

New Zealand vs Pakistan : When Azam Khan enters DJ played Big Show music

குறிப்பாக பருமனான நபர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ஆசாம் கான் செயல்பாடு இருந்தது. இந்த நிலையில், அவர் மூன்றாவது டி20 போட்டியில் பேட்டிங் செய்ய வந்த போது WWE மல்யுத்த நிகழ்ச்சியில் "பிக் ஷோ" என்ற பருமனான மல்யுத்த வீரருக்கு ஒலிக்கப்படும் இசை மைதானத்தில் ஒலிபரப்பானது.

பிக் ஷோ சுமார் 300 கிலோ எடை கொண்ட மல்யுத்த வீரர். மல்யுத்தத்தில் பருமனாக இருப்பதும் ஒரு சாதகமான விஷயம். ஆனால், கிரிக்கெட்டில் அப்படி இல்லை. ஒரு மல்யுத்த வீரரை பருமனாக இருப்பதாக யாரும் கேலி செய்ய முடியாது. ஆனால், ஆசாம் கானுக்கு அவர் உருவத்தை குறிக்கும் வகையில் இசை ஒலிக்கப்பட்டது அவரை கிண்டல் செய்வது போல இருந்தது.

சமூக ஊடகங்களில் அந்த காட்சி பரவியதை அடுத்து பலரும் நியூசிலாந்து மைதானத்தில் இந்த வேலையை செய்த டிஸ்க் ஜாக்கி (DJ)-வை விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பையும் சேர்த்து விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், சில பாகிஸ்தான் ரசிகர்கள் ஆசாம் கான் இதை அவரே விரும்பி கேட்டு பிக் ஷோ இசையை ஒலிபரப்புமாறு கேட்டிருப்பார். அவர் அப்படிப்பட்ட நபர் தான் எனவும் கூறி வருகின்றனர். எது உண்மை என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. WWE நிறுவனத்துக்கு சொந்தமான இசையை அனுமதியின்றி கிரிக்கெட் போட்டியின் போது பயன்படுத்துவது காப்பிரைட் சட்டப்படி குற்றமாகும்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆசாம் கான் 7 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, January 17, 2024, 15:47 [IST]
Other articles published on Jan 17, 2024
English summary
New Zealand vs Pakistan : When Azam Khan enters DJ played Big Show music
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+