Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்தின் வெறித்தனமான வெற்றி.. 22 ஆண்டுகள் பகை தீர்ந்தது.. ஆனால் இந்திய அணிக்கு கலக்கம்- விவரம்

பிர்மிகம்: இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பெற்று இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்துள்ளது நியூசிலாந்து அணி.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

சிறப்பான இன்னிங்ஸ்

சிறப்பான இன்னிங்ஸ்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராய் பேர்ன்ஸ் (81), லாவ்ரன்ஸ்( 81) மற்றும் மார்க் வுட் ( 41) ஆகியோர் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். பவுலிங்கில் நியூசிலாந்து வீரர்கள் அதிகபட்சமாக போல்ட் 4 விக்கெட்களும், ஹென்றி 3 விக்கெட்களையும் சாய்த்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி டாப் ஆர்டரின் அட்டகாசமான ஆட்டத்தால் 388 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இளம் வீரர் டேவன் கான்வே (80), வில் யங் (82), ராஸ் டெய்லர் (80) ரன்கள் குவித்தனர்.

இங்கிலாந்து சொதப்பல்

இங்கிலாந்து சொதப்பல்

பின்னர் அதிக ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அனைத்து பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் நாயகன் விருது, இளம் வீரர் டேவன் கான்வேக்கு வழங்கப்பட்டது.

22 ஆண்டுகளில் முதல் முறை

22 ஆண்டுகளில் முதல் முறை

நியூசிலாந்து அணி, 22 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணியை அதன் மண்ணிலேயே தோற்கடித்துள்ளது. கடைசியாக கடந்த 1999ம் ஆண்டு தான் இங்கிலாந்து அணியை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருந்தது. அதுவும் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், டாம் லாதம் தலைமையில் வென்றுள்ளது.

இந்திய அணிக்கு கலக்கம்

இந்திய அணிக்கு கலக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் விதமாக தான் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதியது நியூசிலாந்து. இந்நிலையில் இந்த அசத்தல் வெற்றி இந்திய அணிக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் மற்றும் பவுலிங் பலம் கூடுதல் அச்சுறுத்தலை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 13, 2021, 22:09 [IST]
Other articles published on Jun 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+